மனுஷ்மிர்தி
மனுஸ் மிர்தி போதிப்பது தர்மமா? தீண்டாமையா? ஒரு ஆய்வு.
இந்திய
மண்ணுக்கு அப்பால்
எங்கிருந்தோ வந்து. நமது இந்தியாவில்
குடியேறிய, ஆரியர்களின் மூலமாக
பரப்பப்பட்ட, ஹிந்து மதத்தின் வேதங்களில் ஒன்றான,
மனுஷ்மிர்தி என்ற மனுதர்மம். பண்டைய காலம்
முதலிளிருந்து இன்றுவரைக்கும் பிராமணர் முதல், நான்குவர்ண
ஹிந்துக்களுக்கும் மற்றும் சண்டாளஜாதியான அனைத்து
ஹிந்துக்களுடைய வாழ்க்கையின்
அனைத்துத்துறைகளிலும் அவர்களுடைய ஆச்சாரங்களும்,
அனுஸ்ட்டானங்களுமாக கருதப்படும் முக்கியமான
ஒன்றாகும்.
அவர்களின்
அன்றாடவாழ்க்கை மற்றும் அனைத்து பிரச்சனைகள் அதற்க்கான
விவஹார தீர்மான சட்டங்களும்
அணைத்து மதவிதிகளையும்
பேணி வாழ
அவர்களுக்கு மனுஸ்
மிர்திதான் ஆதாரமாக உள்ளன. ஒரு ஹிந்து
என்ற பக்ஷத்தில்
அவன் மனுதர்மத்தின்
கட்டளையை ஏற்று
நடந்தே ஆகவேண்டும்.
அன்றுமுதல்
இன்றுவரைக்கும் ஹிந்துக்களின் நீதிமன்றத்தில்
அவர்களின் சட்ட
நூலாக திகழ்வதும்
மனுதர்மம் என்றழைக்கப்படும்
மனுஷ்மிதிதான். அந்த நூலை முன்னில் வைத்துதான்
ஹிந்துக்கள் தங்களுடைய
வாழ்க்கையை நடத்தியாகவேண்டியுள்ளது. மனுஷ்மிர்தி
உலகில் உள்ள
ஒவ்வொரு ஹிந்துவின்
வாழ்க்கையிலும் தவிர்க்கமுடியாத
ஓன்று.
ஒட்டு
மொத்த ஹிந்து
சட்டநூலான மனுஷ்மிர்தியயை
ஒவ்வொரு ஹிந்துவும்
முழுமையாக ஏற்று
வாழ்ந்தால் மட்டும் தான் அவனுடய ஜென்ம
மோக்ஷம் என்ற
வெற்றியை அடையமுடியும்.
அதை
பிராமனர்களுடய வேதமாக கண்டு மற்றவர்களிடமிருந்து மாற்றியது கொண்டு மட்டும் மற்ற
ஹிந்துக்களுக்கு வெற்றியை கண்டிடமுடியாது. ஹிந்து வாக
இருக்கும் காலம்
வரைக்கும் மனுதர்மம்
பிராமணர்அல்லாத மற்ற ஹிந்துக்களுக்கு வாழ்வாதாரமல்லாமல் ஆகிவிடுவதில்லை.
இன்றைய
அளவில் உலகில்
உள்ள ஹிந்து
என்று தங்களை
பற்றி யாரெல்லாம்
கூறி கொள்கிறார்களோ அவர்கள்
அத்துனை பேருக்கும்
இந்த மனுதர்மம்
தவிர்க்கமுடியாத ஒன்றுதான்.
யாரொருவர்
மனுதர்மம் கூறும்
சட்டங்களை பின்பற்ற
வில்லையோ அவன்
அவனுடைய பிறப்பின்
மோக்ஷமற்றவன்.
மனுதர்மம்
கூறும் ஹிந்து சட்டங்கள்
என்பன என்னவென்றும்
மனுதர்மம் ஹிந்துக்களுக்கு
எதை போதிக்கிறது
என்றும் நாம்
ஒரு மனு
ஆய்வின்மூலமாக கண்டறிய முயற்ச்சிக்கலாம்.
மனு
தர்மம் பிராமணர்களுடைய
கூற்றுப்படிஒரு ஹிந்து தர்மம் மட்டுமல்ல மனித
குலம் அனைத்துக்குமாக
வந்த அல்லது
உருவாக்கப்பட்ட எழுதப்பட்ட ஒரு சட்ட நூல்
என்பதாகும் அவர்களுடயகருத்து.
முந்தய
காலங்களில் பிராமண (ஹிந்து) நீதி மன்றங்களில்
மனுதர்மமல்லாமல் மற்று சட்டநூல்களும் இருந்ததாக கருதப்படுகிறது
அதில் மனுஷ்மிர்தி, யாஞவல்கியஷ்மிருதி,பராசர ஷ்மிர்தி,
என்பது ஷ்ம்ரிதி கிரந்தங்களாக
இருந்தது. இவற்றைவிட
முக்கியத்துவம் மனுஷ்மிர்திக்குதான்.
இதனை
சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத
கால முனிவர்
தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும்,
3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. தமிழில் திருலோக சீதாராம்
என்பார் மொழி
பெயர்த்துள்ளார். தனி மனித மற்றும்
சமுதாய வாழ்க்கையை
நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது
இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மனுநீதிச் சோழன் இதனை முழுமையாகப்
பின்பற்றி ஆட்சி
செய்ததாக போற்றப்படுகிறான்.
இந்நூலுக்கு மானவ தர்மம் என்ற பெயரும் உள்ளது.
இந்த
மனுஷ்மிர்தி என்ற நூலானது இதை இயற்றியவரின்
பெயராலேயே பெயர்
பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு
பேர் இருந்தனர்
என்றும் ஏழாவது
மனுவே இந்நூலை
இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது.
ஒரு
லட்சத்துக்கும் மேற்ப்பட்ட சுலோகங்களைக் மாணவ
சாஸ்திரம் என்ற
நூல் வாய்மொழியாக
வழங்கி வந்துள்ளது.
அந்நூலை
மூல நூலாகக்
கொண்டு மனுதர்ம
சாஸ்திரம் உருவாக்கப்பட்டுள்ளது
.
பண்ணிரண்டு அத்தியாயங்களாகப்
பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம்
பெற்றுள்ளன.
மனுஷ்மிர்தி
நூல் நுவலும்
செய்தி
ஒவ்வொரு
ஹிந்துவின் பிராமணனின் வாழ்க்கையின் பல்வேறு வாழ்க்கையின்
துறைகளில், நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள்,
மற்றும் மன்னன்
ஆட்சி புரிய
வேண்டிய முறைகள்,
தண்டனைகள், வழங்க வேண்டிய முறைகள்,என்று பல்வேறு சாதிகளைச்
சேர்ந்த ஆண்
பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன்
மனைவியர் ஒழுக்க
நியதி, பிறப்பு
இறப்புச் சடங்குகள்,
குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை
மனுதர்மமான அந்நூலில்இடம் பெற்றுள்ளன.
இந்த
நூல் பின்வரும்
ஐந்து கருத்துக்களை
அழுத்தமாக வலியுறுத்துகின்றது.
1. ச்சாதுர்வர்ணம்
என்ற நால்
வருணப்படி நிலைகள்
பற்றியும்
2. இதில்
பிராமணிய மேலாண்மை
நிலைகள் பற்றியும்,
கீழ் வருணங்களின்
தாழ்நிலை பற்றியும்.
3. ப்ராமினர்
உடல் உழைப்பு
இழிவானது. எனவே
அதை மேற்கொள்வோரும்
இழிவானவர்.
4. நால்
வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற
பிரிவினர் பின்பற்ற
வேண்டிய கொடூரமான
கட்டுப்பாடுகள்.
5. பெண்ணடிமை.
நாம்
முதலில் ஹிந்துமதவேதங்களின்
மனித பிரிவுகளை
பற்றி
பார்ப்போம்.
ஹிந்துமத
அடிப்படையில் மனிதன் நான்கு ஜாதிகளாக படைக்க
படுகிறான்: 1.பிராமணன் 2.க்ஷத்ரியன் 3.வைஷ்ணவன்
4. க்ஷுத்திரன் இப்படி நான்குவர்ணங்களில் படைக்க பட்ட
மனிதன் அவனனுடைய
பிறப்பின் ஜாதியின்
உத்திரவாதத்தை நன்கறிந்து உணர்ந்து செயல்பட்டு அதன்மூலமாக
அவன் அவனுடைய
ஜாதிய கர்மத்தை(
புனிதசெயல்) முழுமையாக நிறைவேற்றிய பிறகுதான்
வெற்றியை அடைய வேண்டியுள்ளது.
பிராமணர் உயர்வு
ஹிந்து
தர்மங்களில் பிராமணன் ஏன் மிக மேலாக கருத
படுகிறான் என்பதை
மனு தர்மம்
தெளிவுபடகூறுகிறது.
பிராமணன்
மனித பாதுகாப்பிற்காக
படைக்கபட்டவனாகையால் பிராமண ஜாதிக்கு
பிரதேகம் பிரதேகம்
கர்மங்கள் கட்டளைகள்
இடப்பட்டுள்ளனவாம் வேதம்
ஓதல், வேதம்
பயின்று கொடுத்தல்,
எஜனம், யாஜனம்,
தானம், ப்ரதிக்ரஹம்,
பிராமண,
க்ஷத்ரிய, வைஷிய,
க்ஷுத்திரன், என்ற நான்கு வகயாக ஜாதிகளாக
படைக்கப்பட்ட இவர்கள்
இறைவனுடைய முகம்,
தோள், தொடை,
பாதம் ஆகிய
பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 :
31).
மனிதர்களை
கடவுள் மனிதர்களை
நான்கு ஜாதிகளாகவும்
வர்ணங்களாகவும்மாகபடைக்க பட்டுள்ளத்தில் மிக
முதைன்மையான ஜாதி பிராமண ஜாதிஎன்று மனுதர்மம்
சொல்கிறது.
கடவுளுடைய
நெற்றியில் நின்றும் பிறந்த பிராமண ஜாதி
உயர்ந்தவனாகையால் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும்
அவனுக்குரியதாக்க பட்டுள்ளது என்றும் இந்த உலகை படைத்த
கடவுளின் நீதியென்றும்
மனுதர்மம் கூறுகிறது.
இறைவனுடைய
முகத்தில் பிராமணர்
தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள்
என்பதைப் பின்வரும்
சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.
''புருஷ
தேகம் சுத்தமானது.
இடைக்கு மேல்
மிகவும் தூய்மையாகும்.
எனவே பிரம்மாவின்
முகம் பெரிதும்
தூயது (1 : 92).
மிக்க
தூயதான முகத்திலிருந்து
வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும்,
முதலில் தோன்றியமையாலும்,
படைக்கப்பட்ட யாவற்றினும் பிராமணன் சிறந்து விளங்குகின்றான்.
(1 : 93)
சுயம்புவான
பிரம்மா, தேவர்களுக்கு
அவி சொரிந்து
மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம்
செய்யவும் தக்கவனாகப்
பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார்
(1 : 94).
மாந்தரின்
சமூக ஒழுக்கங்களை
நன்கு புரிந்து,
நிலை நிறுத்தும்
பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை
அவன் பெற்றிருக்கிறான்
(1 : 99).
பிறவி
மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில்
காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக
அவன் விளங்குகின்றான்
(1 : 100).
எனவே
அவன் பிறரிடமிருந்து
பெறுகின்ற உணவு,
உடை, பொருள்
யாவும், அவனுடைமையை
அவன் பெறுவதாகவும்
ஏனையோர் அவனுடைமையைப்
பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).
இவ்வாறு
பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு
அதை நிலைநாட்டும்
வகையில் பல்வேறு
கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார்.
மங்களம்
மற்றும் மேன்மையைக்
குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய
வேண்டும் (2:31, 32)
என்றும்
பிராமணர் உணவு
அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும்
(2 : 176-178) வலியுறுத்துகிறார்.
தவறு
செய்யும் பிராமணர்களுக்கு
விதிக்க வேண்டிய
தண்டனைகள் குறித்து
மனு கூறும்
செய்திகள் வருமாறு.
'பிராமணனுக்குத்
தலையை முண்டனம்
செய்தல் உயிர்த்தண்டனையாகும்.
ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 :
378).
எந்தப்
பாவம் செய்த
போதிலும், பிராமணனைக்
கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை
விட்டுத் துரத்துக
(8 : 379).
பிரம்மஹத்தியை
விடப் பெரும்
பாவம் உலகில்
இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும்
கூடாது (8 : 379).
பிராமணனுடன்
அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக
அமர்ந்த நாலாம்
வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத
வகையில் இடுப்பிற்
சூடு போட்டோ,
உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை
விட்டு ஓட்ட
வேண்டியது (8 : 281).
மற்ற ஜாதிகள்பற்றி மனுவின் பார்வையில்.
க்ஷத்த்ரீய,
வைஷ்ணவ, க்ஷூத்ரன்
நிலை பற்றி
மனு தர்மம்
கூறுவதைபார்ப்போம்.
இவ்வாறு
பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு,க்ஷத்த்ரீய, வைஷ்ணவ,
க்ஷூத்ரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப்
பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.
''பிரஜா
பரிபாலனம் செய்வது,
ஈகை, வேள்விகள்
புரிவது வேத
பாராயணம் செய்விப்பது,
விடிய சுகங்களில்
மனதை அலைய
விடாமல் உறுதியாக
நிற்பது மன்னர்
கடமையாகும். (1 : 89)
வாணிபர்க்கு
ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம்,
மலையாரம், கனிப்பொருள்,
விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல்,
வட்டிக்கு விடுதல்,
பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)
ஏவலான
மக்கள் மேலே
சொன்ன மூவர்க்கும்
பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக்
கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு
உண்டென்றும் பணித்தார் (1 : 91).
முதன்மை
ஜாதியான பிராமணனுக்கும்
இரண்டாம் ஜாதியாகிய
க்ஷத்ரியனுக்கும் முன்றாம் ஜாதியாகிய வைஷ்ணவனுக்கும் முற்றிலுமாக
அடிமை பனி
எடுக்கவேண்டும். செய்த தொழிலுக்கு கூலியை கேட்டுவாங்குவது
பெரும் குற்றமாகும்.
உழைப்பின் ஊதியத்தை கேட்டு
வாங்காமல் அவர்களுடைய
ஊதியமாக மேல்ஜதிகாரர்களாகிய
அந்த மூவர்ணர்
உழைப்பின் ஊதியமாக
கொடுக்கும் பழைய உணவு, பழந்துணிகள், மற்றும்
அவர்களுக்கு தேவையற்ற ஏதாவது ஒன்றைமட்டும் தான்
உதியமாக பெற்றுக்கொள்ள
வேண்டும்.
க்ஷூத்திரன் அவனுடைய
வாழ்நாளில் பொருளாதாரத்தை சேர்க்க கூடாது என்றது முதல் மனு கூறுவதை கவனிப்போம்.
நான்கு
வருணத்தாரின் கடைசி வருணமான க்ஷுத்திர வருணத்தவர்
ஒருக்காலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது
என்ற கருத்தை
மனு உறுதிபடக்
கூறுகிறார்.
க்ஷுத்திரன்
என்ற ''நாலாம்
வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும்
அறம் அறியாதோரும்,
தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும்,
பாவிகள் அருகுறையும்
ஊரிலும் வசிக்கக்
கூடாது. (4 : 61).
மன்னன்
இயற்ற வேண்டிய
விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால்
நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்
போல், கண்
முன்னே துன்பமுறுகின்றது.
(8 : 21)
க்ஷுத்திரர்களாகிய
நாலாம் வருணத்தாரும்
நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற்
போகின்ற நாடு
வறுமை வாய்ப்பட்டு
விரைவில் அழிந்து
போகும் (8 : 22).
அனுஷ்டானங்களில்லாத
பிராமிணன் மன்னன்
சார்பாகத் தீர்மானங்களைச்
செய்யவும் கூடும்.
நாலாம் வருணத்தவன்
செய்யக்கூடாது.
வைசியனையும்,
நாலாம் வருணத்தானையும்
தன் தன்
தொழிலைச் செய்யுமாறு
மன்னன் கட்டளையிடுக.
இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து
விடுவார்கள். (8 : 417)
...... இழி பிறப்பாளர் பெருகி வரும்
நாடு விரைவில்
குடிமக்களுடன் அழியும் (10 : 61).
பிராமணனின்றி
சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி
அந்தணனின் ஜீவனமும்
நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால்
இம்மை மறுமைகளின்
இன்பங்களை அடையக்
கடவர் (9 : 322).
வருணமற்றவர் அதாவது
(சண்டாளன்ஜாதி)
ஹிந்துமதத்தின்
ச்சாதூர் வர்ணம்
என்ற நான்கு
வர்ணத்திலும் உட் கொள்ளாத மிருகத்தை
விட மிக
கேவலமான ஒரு
ஜாதியற்ற ஜாதிதான்
சண்டாள ஜாதி,
அதாவது
சண்டாள வர்ணம்
நான்கு
வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை
மனு குறிப்பிடுகின்றார்.
தேர்ப்பாகர்,
இரண வைத்தியர்,
மீன் பிடிப்பவர்,
எலி, உடும்பு
பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர்
நால் வருணத்திற்கு
வெளியில் உள்ளவர்களாவர்.
(10 : 47 - 49)
இவர்கள்
வாழும் இடமாக
''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி,
தோப்பு, இடுகாட்டின்
அருகில், மலை,
மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப்
பலரறிய இயற்றி
வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.
சண்டாளர்களின்
இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய
தொழில், வாழ்க்கைமுறை
தொடர்பாக மிகவும்
இழிவான கட்டுப்பாடுகளை
மனு விதித்துள்ளார்.
''ஊருக்கு
வெளியில் சண்டாளனும்,
ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள்
உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள்
துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை
இவர்கள் வளர்க்கலாம்.
மாடு முதலியவை
வைத்துப் பிழைக்கக்
கூடாது'' (10 : 52)
''இவர்கள்
பிணத்தின் ஆடையை
அணிய வேண்டும்.
உடைந்த சட்டியில்
சோறுண்ண வேண்டும்.
இரும்பு பித்தளை
நகைகளை அணிய
வேண்டும். எப்போதும்
தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 :
52).
''நற்கருமங்கள்
நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது.
இவர்கள் தங்கள்
வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன்
கோடலும் வேண்டும்''
(10 : 53).
''இவர்களுக்கு
நேரே உணவு
பரிமாறல், ஏவலாளரைக்
கொண்டு, உடைந்த
சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள்
ஊரிலும், நகரிலும்
இரவில் திரியக்கூடாது''
(10 : 54).
''அரசன்
கொடுத்த அடையாளத்துடன்,
தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும்,
பகலில் ஊர்த்தெருக்களில்
திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்களுக்கு
கடமையானது'' (10 : 55).
''மரண
தண்டனை பெற்றவரைக்
கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின்
உடை, அணி,
படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்''
(10 : 56).
இத்தகைய
கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான
வழியையும் மிக
எளிதாகக் காட்டுகிறார்.
'' பிராமிணன்,
ஆ, பசு,
பெண், பாலர்
இவர்களைக் காக்கும்
பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம்
செய்வதே தீண்டத்தகாத
பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).
பெண்கள்
அடுத்து
பெண்கள் குறித்த
மனுவின் கருத்துக்களைக்
காண்போம்.
மனுவி
ல் பெண்களை
பற்றி கூறியது
இப்படி :
"பிதாரக்ஷதி கவ்மாரெ பர்த்தாரக்ஷதி எவ்வனே புத்தரோ ரக்ஷதி
வார்தக்யே ந ஸ்திரீ
ச்வாதந்த்ரியம் அர்ஹதெ" 10 : 148
பொருள்: பெண்கள்
பருவத்தை அடையும்வரை தந்தையின் அடைக்கலத்திலும் இளமையை அடைந்தால் கணவனின் அடைக்கலத்திலும் முதுமையை அடைந்தால் மகனின் அடைக்கலத்திலும் ஆக பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒருப்போதும், ஒருப்போதும் சுதந்திரம் அடையக்கூடாது
அவர்கள் சுதந்திரமடைய அருஹதையற்றவர்கள்என்று.
''எந்தப்
பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே
கூட எந்தப்
பெண்ணும் தன்னிச்சைப்படி
எச்செயலும் இயற்றலாகாது'' (10 : 147)
''இளமையில்
தகப்பன், பருவத்தில்
கணவன், விதவையான
பின் மக்கள்
இவர்கள் காவலிலன்றிப்
பெண்கள் தன்னிச்சையாக
இயங்கலாகாது'' (10 : 148).
''இழி
நடத்தை, பரத்தையர்
நட்பு, நற்குணமின்மை
இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண்
தன் கணவனைத்
தெய்வமாகப் பேணுக'' (10 : 154).
''அன்றாட
வேள்விகள் ஐந்தும்,
உண்ணாமை, நோன்பு
முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப்
பேணுதலே அவர்க்கு
மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).
''நிறை
பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர்
தம் இயல்பாவதால்,
கணவனால் நன்கு
போற்றிப் புரக்கப்படும்போதும்,
அவர்கள் கணவரின்
காவலை விரும்புவதில்லை''
(9 : 15).
இவ்வித
இயல்புகள் மாதர்க்குப்
பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற்
பேணும் முயற்சியில்
ஆடவர் கவனமாக
இருக்க வேண்டியது
(9 : 17).
'படுக்கை,
ஆசனம், அழகு
செய்தல், காமம்,
சினம், பொய்,
துரோக எண்ணம்
இவற்றை மாதரின்
பொருட்டே மனு
படைத்தார்' (9 : 17).
மாதர்க்குப்
பிறவியைத் தூய்மையாக்கும்
சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல்
யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும்
இல்லை. பாவம்
நீக்கும் மந்திர
உபதேசமும் கிடையாது.
எனவே பொய்யைப்
போல் மாசு
வடிவினராக மாதர்
இயன்றிருக்கின்றனர் (9 : 18).
மனு தர்ம எதிர்ப்பும் அதன் நியாயம் மற்றும்
அநியாயங்களும் பற்றி.
மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள்
ஹிந்துவாக வாழந்து
கொண்டிருப்பவர்களேதான். ஹிந்துமதத்திலேயே இருந்துகொண்டு அந்தமாத நியமங்களுக்கும்
கொள்கைகளுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருப்பவர்கள் தான். இது சரியில்லாத ஒன்றுதானே
ஒரு
மதத்தையோ, கொள்கையையோ
பிடிக்கவில்லைஎன்றால் ஓன்று அவர்கள் இந்த கொடுமையான ஜாதிய
மதத்திற்கு எதிர்ப்புதெரிவித்து அந்த மதத்தைவிட்டு வெளியேறி
அவர்களுக்கு பிடித்தமான மாற்று மதங்களில் தங்களை
இணைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால்
நாத்திகராகவோ மதங்களுக்கு அப்பார்பட்ட தன்னிச்சைகாராகவோ மாறி மற்ற மத தெய்வங்களையும்
கொள்கைகளையும் எதுர்ப்பதுபோல எதிர்த்து ஒதுக்கவோ செய்யலாம்.
அப்படியல்லாமல்
அந்தமதத்திலேயே இருந்துகொண்டும் ஹிந்து மத கலாச்சாரங்களில் வாழ்ந்துகொண்டும் அதனுடைய
கொள்கை கோட்பாடுகளை
குறைகூறி அதனை
திருத்தமுயல்வது என்பது ஒருமுட்டால்தனமான செயலாகும். எந்தமதம்
மற்றும் கொள்கை,
கோட்பாடுகளானாலும் அதில் தவறுகள் ஏதாவது
இருக்குமேயானால் அந்த தவறுகளைஅதை உருவாகியவர்ககளும்
அதை இன்றைய
காலகட்டத்தில் ஏற்று நடப்பவர்கலுமே அதை சரி செய்யவேண்டும்
என்பதுதான் நியாயம்.
அதைவிட்டுவிட்டு
அதை ஏற்றுகொள்ளாத
ஒருவர் தங்களுக்கு
சாதகமாக ஆக்கி
கொள்வதற்காக அதை பற்றி பேசுவதற்கோ குறைகளை
கூறுவதற்கோ என்ன அர்ஹதை இருக்கிறது. அதை
அதர்மமாகத்தான் கருதமுடியும்.
இவர்கள் நாத்திகராக
இருந்தாலும் திராவிடர்களாக இருந்தாலும் ஷோசியல்மற்றும் கம்யுணிஸ்ட்டு
மார்கிஸ்ட்டு அமைப்புகளை
சார்ந்தவராக இருந்தாலும் புத்தமதகொள்கையைகடிபிடிப்பவராக
இருந்தாலும் ஜைனமதத்தை கடைபிடிப்பவராக இருந்தாலும் சிக்குமததை
சார்ந்தவராக இருந்தாலும் சரியே.
இவர்களுடைய
பெயரின் ஆதாரம்,
குடும்ப கலாச்சாரம்,
உணவுமுறை,பழக்கவழக்கங்கள்
பேச்சு கலாசாரம்
வியாபார கிரயவிகிரயங்கள்,சொத்தவகாசம்,பாரம்பர்யம்,மற்றும் தொழில்,திருமண நடைமுறைகள்,
இவர்களுடைய வாழ்க்கையில் நூற்றுக்கு என்பது சதவிகிதம்
ஹிந்துமதத்தயோ அதன் கலாசாரத்தயோ தான் பின்பற்றுகின்றனர் என்பதுதான் உண்மை .
இந்த
ஆர்ய ஹிந்துமத
கலாச்சாரங்களை விட்டுவிட்டு இவர்களுடைய வாழ்க்கைக்கு
வேறென்னதான் வழி இருக்கிறது. ஒருபெயர்வைக்கவேண்டும் என்றால் கூட அந்த கலாசாரத்திளிருதுதான்
எடுத்துக்கொள்ளவேண்டும்.தமிழகத்தில் நாத்திகதலைவரான அதன் தலைமையை உருவாக்கிய
நம்முடைய
பெரியாரின் பெயர் அதற்க்கு
ஒரு உதாகரணம்
"ராமஸ்வாமி" என்ற அந்த
ஆர்ய தெய்வ
நாமத்தை அவருடைய
வாழ்க்கை சரித்திரத்திலிருந்து
மாற்ற முடியவில்லையே
ஏன்? அப்படி நிகழ்ந்தது! ஆம்
ஆரிய கலாசாரத்தை
யாராலும் தங்களிருந்து
அப்படி ஒதுக்கி
விட முடியாது.
இனி
இந்த ஹிந்து
அல்லாத ஹிந்துக்கள் என்ன கூறுகிறார்கள்
என்றுபார்ப்போம் .
அப்படி
இருந்தும் இந்தியாவில் மனு தர்ம சாஸ்திரத்திற்கு
எதிரான கருத்துக்களும்
போராட்டங்களும் தமிழ்நாட்டிலும் இந்தியாவின்
ஏனைய பகுதிகளிலும்
நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும்,
வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின்
நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல்
எழுப்பினார்கள்.
மனு
- மனு தர்மம்
என்ற சொற்களைப்
பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின்
வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை
முன்மொழிந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த
தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர்
25 - ஆம் நாள்
மனு தர்ம
சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது.
(அம்பேத்கர் 1997 : 197, 198)
''இந்துச்
சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின்
பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும்,
மனு ஸ்மிருதியில்
அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான
அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள்,
கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன.
மனித
உரிமைகளை அவர்களுக்கு
மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக
இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள
மனித உரிமைகளுடன்
இவற்றை ஒப்பிடும்போது
இந்த மனு
ஸ்மிருதி எத்தகைய
நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான
நூல் எனப்
போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என
இந்த மாநாடு
கருதுகிறது.
இதன்பால்
தனக்குள்ள ஆழமான
அளவிட முடியாத
வெறுப்பை வெளிப்படுத்தும்
பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது
சமூக ஏற்றத்
தாழ்வைப் போதித்து
வருவதைக் கண்டித்தும்
மாநாட்டு நடவடிக்கைகளின்
முடிவில் இதன்
பிரதி ஒன்றை
எரிப்பதென இம்
மாநாடு தீர்மானிக்கிறது''.
இதன்படி
இரவு ஒன்பது
மணிக்கு மாநாடு
நடக்கும் இடத்தில்
பலிபீடம் போல்
அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன்
மேல் வைக்கப்பட்டது.
தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு
நெருப்பு மூட்டித்
தகனம் செய்தனர்.
மனுநூலின் தகனம்
முடிந்த பின்
அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி
இனி பாரதத்தில்
செல்லாது என
உலகம் தெரிந்து
கொள்ளட்டும்'' என்று முழங்கினார். (வசந்த்தின் 1995:56)
இந்
நிகழ்ச்சி குறித்து
அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்:
''இந்து
சமூக அமைப்பு
என்னும் கட்டுமானம்,
மனுஷ் மிருதி
என்ற அடித்தளத்தின்
மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுஸ்மிருதி
இந்து சமய
நூல்களின் ஒரு
பகுதி. எனவே
அது எல்லா
இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால்
பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன்
புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை
ஏற்று நடக்கிறான்.
மனு,
சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச்
சட்ட வலுவையும்
தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த
மனுஷ் மிருதியை
எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து
சமயம் என்ற
கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில்,
பாஸ்டில் சிறை
எவ்வாறு கொடுங்கோன்மையின்
உருவகமாக இருந்ததோ
அவ்வாறே இந்து
வாழ்க்கை முறைக்கும்
சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த
ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது
மனுஷ் மிருதி.
பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த
மக்கள் பகுதியினரின்
விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே
1927 ஆம் ஆண்டு
மஸத்தில், மனுஷ்
மிருதி எரிக்கப்பட்ட
நிகழ்ச்சி தீண்டப்படாத
மக்களின் விடுதலை
வராற்றில் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.''
மனுஷ்
மிர்தியை மட்டும் எரித்துவிட்டால் அந்தபிரச்சனைகளுக்கு
தீர்வுகள் கண்டுவிடமுடியுமா?
ஒட்டுமொத்த இந்தியாவின் மக்கள்தொகையில்
கணிக்கமுடியாத அளவுக்கு ஒரு சிறு கூட்டமாக
இருக்கும் பிராமணர்களிடம்
மட்டும் இருக்கும்
ஒருகலாசாரமல்ல இந்த ஜாதீய தீண்டாமை எனபது.
உலகில் உள்ள
ஒட்டுமொத்த ஹிந்துக்களில் 95%விகிதமுள்ள
மக்களில் அவர்களுடைய
நம்பிக்கையாக போற்றப்பட்டு அதனடிப்படையில்
தங்களுடைய வாழ்க்கையையும்
அமைத்துக்கொண்டு தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் அனைத்துதுறைகளிலும்
சாதியென்ற ஓன்று
இல்லாமல் வாழமுடியாது
என்று கருதி
வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இவர்களுடைய
எதிர்ப்புக்குரல் என்ன மாற்றத்தை தான் செய்துவிடமுடியும்.?
இந்த எதிர்ப்புக்குரலை நாம் ஒரு உதாகரணம் வழி
ஒப்பிடுவோமானால் சிரிப்புதான் வரும். ஒரு மிக
பெரும் இருள்
சூழ்ந்த வனத்தில்,
காட்டில் வழிகளை
கண்டறிய
ஞானியான ஒருவர் ஒரு மின்மினி பூச்சியின்ஒளியை
உபயோக படுத்த
முயல்வாறேயானால் அவரை நாம் எந்த வகைமனிதராக
கருதுவோமோ அதைபோன்றுதான்இவர்களையும்
நாமக்கு காணமுடியும்.
இந்த
பறந்து, விரிந்து
ஆழமான வேறுகள்
படைத்த இந்த
சாதியென்ற ஒற்றின்
ஆழம் அறியாத
இவர்கள் புற்றுநோய்
முற்றிலுமாக பாதித்த ஒருவருக்கு அவருடைய மேல்க்காயத்துக்கு
புண்ணுக்கு மருத்துவம் நடத்துபவர்களை போன்றவர்கள்தாம்.
நாம்வாழும்
நம்முடைய இந்தியாவில்
அனைத்து சட்ட திட்டங்களையும்
மாற்றிமறிக்கும் நமக்கு இந்த சாதியென்ற ஒன்றை
அகற்றி நிருத்திவைக்க ஏன் முடிவதில்லை.? இங்கு ஜாதி இல்லை
என்பவனும், ஜாதிக்காரனும், கிறிஸ்தவனோ,
முஸ்லிமோ, சீக்கியனோ
யாருமாக இருந்தாலும்
அவனுக்கு அவனுடைய
இறப்பு,பிறப்பு,படிப்பு,அரசாங்க
தொழில், மற்றும்
சலுகைகளுக்காகவும் ஜாதி சான்றிதழைமுதலில் நீட்டித்தான் ஆகவேண்டும். அதை இன்றளவும்
மாற்றமுடியாத நமக்கு என்றாவது மாற்றி அமைக்கமுடியும். எங்குதான் ஜாதிசான்றுதல்
இல்லாமமல் ஒரு
கார்யம் நடக்குகிறது.
நிலைமை
இப்படி இருக்க
இந்தஜாதி தீண்டாமையை
எதிர்ப்பவர்கள்
பூனை
தன்னுடைய
கண்ணை இருக்க அடைத்துவைத்துகொண்டு
உலகமேஇருட்டு என்று தன்னை நம்பவைத்துகொண்டிருப்பதை போலத்தான் இப்படியான
செயல்கள்களை நமக்கு காணமுடிகிறது.
''ச்சாதூர்
வருணமாக இருக்கும்
இந்த இந்து
சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகமனு பிரிக்கவில்லைஅவருக்கு முன்னே நடைமுரயிளிருந்துவந்த ச்சாதூர்
வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்ப்பாட்டை மீண்டும்
தெளிவு படித்தைனார்.
ஒருவன் பிராமணனா,
க்ஷத்ரியநனா ,வைஷியன அல்லது க்ஷுட்திரநனா என்பது
பலஅவரருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே
இருந்து வருகின்ற
ஒரு பிரிவினை.
அந்தப் பிரிவினையை
மேலும் தீவிரப்படுத்தி
அதற்கு மிகுந்த
அழுத்தம் கொடுத்தார்என்பதுதான்
உண்மை . இந்தப்
பிரிவினைகள அவரிடமிருந்து தோன்றியதல்ல.
மாறாக மனுவிடமிருந்து
ஒரு புதிய
பிரிவினை தோன்றியது.
1. ச்சாதூர்வருண
அமைப்புக்குள் இருப்பவர்கள்.
2.ச்சாதூர்
வருண அமைப்புக்கு
வெளியே இருப்பவர்கள்
என்பதே
இந்தப் பிரிவினை.
இந்தப் புதிய
சமூகப் பிரிவினை
மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின்
பண்டைத் தர்மத்துக்கு
அவரது புதிய
சேர்ப்பு இது.
இந்தப் பிரிவினை
அவருக்கு அடிப்படையானதாக,
மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான்
இந்தப் பிரிவினையை
முதலில் உருவாக்கியவர்.
அதற்குத் தனது
அதிகார முத்திரை
அளித்து அதனை
அங்கீகரித்தவர்!
இக்
கூற்றின் உண்மைத்
தன்மையை இதுவரை
நாம் பார்த்த
மனு தர்ம
சூத்திரங்கள் உணர்த்துகின்றன.
மனுவையும்
மற்றும்
ஹிந்து தர்மங்களையும் எதிர்ப்பவர்களாகிய அம்பேத்கர்முதல்
மற்ற அனைவரும்
செய்வது ஒருதரத்திலான
அக்கிரமம் ஆகும்.
ஒருசமூகம்
அவர்களுடய வாழ்வாதாரமாக
கருதி , தங்களுடைய
வாழ்க்கை நெறிக்காக
ஒருசட்டத்தை கடைபிடித்து வாழும்போது அது சரியல்ல
என்று அந்த
மதத்திலேயே இருந்து கொண்டு அதை எதிர்ப்பது ஒரு நல்ல அறிவும்
சிந்தனையும் உள்ள ஒருவருக்கு உகந்தது அல்ல.
அந்தமதத்தின்
அடிப்படை காரியங்கள் அவர்களுக்கு
பிடிக்கவில்லை என்றால் அதைவிட்டு வெளியேறுவதும் அதற்க்கு
விடை கூறுவதையும்
அதை விட்டுவிட்டு அந்த மதத்தின் சின்னங்களை
அணிந்துகொண்டு அதன் முகவரியில் வாழ்ந்து கொண்டும் அதை குறைகூறி அந்த
மதத்தின் அடிப்படைகளை
மாற்றி தங்களுக்கு
தகுந்தாற்ப்போல் அவர்களுக்கு ஏற்றவையாக மாற்றி அருளவேண்டுமென்று
கூக்குரலிடுவதும் அதற்காக
அடம்பிடிப்பதும் அதற்காக
ஒரு போராட்டமும்
நடத்தி மஹா
மாநாடும் நடத்துவதும் தனி சுயநலமும் நீதியற்றதுமாகும்.
தலித்துகளுக்கு
வேண்டி குரல்கொடுத்த
அம்பேத்கர் செய்தது என்ன? தலித்துகளாகிய
அவர்களை (இந்திய
தலித் மக்கள்
தொகையில் ஒருசிருகுளுவைதவிற)மற்றவர்களை என்றும்
அவர்கள் தலித்துகளாக
இருக்க செய்துவிட்டு
அவர்மட்டும் உயர்ந்த ஜாதியான மற்றொரு
ஆரிய ஜாதியான பவுத்தத்துக்கு மாறியது ஏன்? அங்கென்ன
இப்படியான சாதிசட்டங்கள்
இல்லாவிட்டாலும் ஜாதிகள் இல்லாத மதமா பவுத்தமதம்?
ஒரு தூய
மனித மோக்ஷ
மார்க்கமாஎன்னபவுத்தம்.!
பூமியில்
உள்ள அணைத்து
மனிதர்களும் பவுத்த மதத்தையும் அதன்
தலைமை சட்டங்களையும்
புத்தனின் வாழ்க்கையையும் கடைபிடிப்பாறேயானால்
பூமியில் மக்கள்
எப்படி பிறப்பார்கள்.
தனி
பிரம்மச்சரியத்தை போதிக்கும் புத்தமதம் மனித இனத்திற்கு
புத்தனின் போதனைகள்
அப்படிஎன்னதாம் நன்மைகளை
செய்து விட்டதாம்.
ஹிந்து மத
தர்மங்களைவிட புத்த தர்மம் மேலாகுவதற்கு அதில் என்னதான்
உள்ளது. இன்று
மனிதனை உயிருடன்
கொல்லுவதும் ஒரு தர்மமாக கொண்டுள்ள புத்தமதம்
எந்தவகையில் நல்லமதமாக மாறியது இவர்களுக்கு.
சரி
ஒருவருக்கு அவருக்கு பிடித்த ஒரு மதத்தை
தழுவ சுதந்திரம்
உண்டு அதன்
அடிப்படையில் அம்பேத்கர் அதை தழுவினார் என்றுவைத்து
ஹிந்து தர்மங்களை
முற்றிலுமாக குழிதோண்டி புதைக்கவேண்டும்
என்று நினைப்பது
எந்தவகையில் நியாயம்.
ஆர்யர்களுடைய
ஹிந்து மத
தர்மங்களை கடம்
எடுத்து உருவான பவுத்தமதம்
ஹிந்துமத கோட்பாடுகளை
அதன் சிலை
வணக்க வழிபாடுகளை
அடிப்படையாக கொண்டமதம் தானே புத்தமதம்
ஹிந்துமதத்தின் துனை மதம் மட்டும்தான் ஒருநாணயத்தின் இருபுறங்கள்.
ஹிந்துமதத்தின் மற்றொரு புறம் மட்டும்தான் புத்தமதம்
என்பதை ஏன்
இவர்கள் மறந்துவிட்டார்களா
இந்த ஹிந்துமத
எதிர்ப்பாளர்களாகிய ஹிந்துவல்லாத ஹிந்துக்களாகிய
இவர்கள்.
ஹிந்துமதத்தின்
நாலாம் வர்ணக்காராகிய
இவர்கள் ஒன்றாவது
வர்ணக்காராராக இருந்திருப்பார்களேயானால் இவர்கள்
இப்படி ஜாதிகொடுமைக்கு
எதிராக போராட்டம்
நடத்தி இருப்பார்களா
என்ன.
இல்லை
ஏன்று தான்
சொல்லமுடியும். ஏன் என்றால் இவர்கள்
இப்போதும் அந்த
ஹிந்து
மதத்தின் மற்று ஏதாவது ஒரு கிளையில்தான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதை இவர்கள்
எப்போதும் மறந்தே
விடுகின்றனர்.
ஜைனமாகவும், வைஷ்ணவமதமாகவும்,
புத்தமதமாகவும், இன்னும் இந்தியாவில் பிறந்த சிக்கு
மதம், சவ்
ராஷ்டிர மதம்,
தீனேஇலாஹி என்ற
அக்பரின் மதம்,
சூபிமதம், காதியானில்
தோன்றிய அஹ்மதியா
முஸ்லிம் மதம்,
இப்படி இந்தியாவில்
தோன்றிய எந்த
மதமாக இருந்தாலும்
இவைகள் அனைத்தும்
வர்ண விவேஜனம்
உள்ள ஆர்யார்களுடைய
மதம் என்பதை
நினைவில் கொள்ளாமல்
விட்டுவிடுவது ஏன்?.
அதை
ஒரு உதாரணம்
மூலமாக சொல்லவேண்டுமென்றால்
பால் என்ற
ஆர்ய மூலத்தில்
இருந்து வரும்
நெய்,
வெண்ணை, தயிர், மோர், இப்படி
யான பலபொருள்கள்
பாலில் இருந்து
வருவதைப்போல இந்த மதங்கள் அனைத்தும் ஹிந்து
மதத்தில் இருந்து
ஒவ்வொரு உருவமெடுத்து
உருவான மதங்கள்.
ஆகையால்
அதில் ஒன்றிலும்
வர்ணங்கள் இல்லை
என்று யார்கூறினாலும்
அது ஒரு
அறிவுள்ளவர்களுடைய சொல்லாகவே இருக்காது
என்பது தான்
உண்மை .
ஜாதி
என்ற வர்ணம்
என்பது
ஆர்யர் அனார்யர் (ஆர்யார்களும்
ஆர்யர்கள் அல்லாதவர்களும்)
களிடையேயான இடைவெளிகளை ஒருமைபடுத்த யார் நினைத்தாலும்
எப்படி ஒருமைப்படுத்த
முடியும். அது
ஒருக்காலும் வர்ணங்களை மறைத்து விடாது எப்படி ஹிந்து
மதத்தில் சிலை
வழிபாடு இருக்கிறதோ
அதேபோல இந்த
அனைத்துமதங்களிலும் சிலை வணக்ககம் உள்ளன.
எப்படி
ஹிந்துமதத்தில் அத்வைதம், மற்றும் மறுஜென்மம் என்ற
புணர் ஜென்மம்
போன்றவைகள் இருக்கிறதோ அதேபோல தான் இவைகள்
அனைத்தும்.
நாம்
ஒரு பசுவை
அது இருக்கும்
இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும்போது
அது பசுவல்லாத
மற்றொன்றாக மாறுவதில்லையோ அதைப்போல தான்.
இந்தியாவில்
தோன்றிய எந்த
மதமாக இருந்தாலும்
அது நாத்திக
மதமாக இருந்தாலும்
சிலை வணக்கம்
என்பது அதை
பின்தொடர்ந்தே இருந்திருக்கும்.
நாம்
நம்முடைய தெருவுகளின்
முக்கிய இடங்களில்
பெரியாரின் சிலைகளையும் அந்த சிலைகளுக்கு மரியாதை
செய்வதையும் பூமாலைகள் அணிவிப்பதையும் பாமாலைகள் பாடுவதையும் நாம் கண்டு கொண்டேதானே இருக்கிறோம். இதை நாம்யாவராலும் மறுக்க
முடியுமாஎன்ன.
புத்தனுக்கும்,சீக்கிய குருனானாவுக்கும்,
காதியானில் தோன்றிய அஹமதிய முஸ்லிம் தலைவரான
குலாம் அஹமது
மீர்ஷாவுக்கும், ஹிந்துமதத்தை துறந்த அம்பேத்கருக்கும், ஹிந்துமதத்தை மிக வன்மையாக எதிர்த்த
தமிழகத்தை சேர்ந்த
இ வே
ர பெரியாருக்கும்,
மற்றும் மற்று
யாராக இருந்தாலும்
இவர்கள் அனைவருக்கும்
ஒரு சிலையோ
ஞாபகத்தில் வைக்கும்பொருட்டு
அவர்களுடய சிறியதோ
பெரியதோ ஆண
மரியாதை செய்வதற்க்கோ
வணங்குவதற்க்கோ வேண்டி ஒரு சிலையோ
வரை படமோ
இல்லாமல் இல்லை
இப்படியான இவர்கள்
ஹிந்துமதத்தை இவர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள
முடியவில்லை.
இது
ஒருபுறம் இருக்க.
மறுபுறத்தில் இந்த மனுதர்மத்தை இந்திய திரு
நாட்டில் மற்றவர்களிடையே
நடைமுறை படுத்துவதற்கான
ஆயத்த பணிகளை
முடுக்கி விடுபவர்களின்
நிலையோ அதைவிட
கடினம் இன்றும்
மனுவைப் போற்றுபவர்கள்
நம்மிடையே உள்ளனர்.
இந்தியா விடுதலை
பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில்
அந் நீதிமன்ற
வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று
வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச்
சிலை நிறுவினால்
அதைத் தாமே
முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார்.
ஆனால்
ராஜஸ்தான் மாநிலத்தை
பா.ஜ.க. ஆட்சி
புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற
வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு
மாநில காவல்துறையினரின்
பலத்த பாதுகாப்பு
தரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது
இமாசலப் பிரதேசத்தில்
மனாலி என்னுமிடத்தில்
ஏற்கனவே உள்ள
மனு கோயிலைப்
பல லட்சம்
செலவு செய்து
புதுப்பித்துள்ளனர்.
''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச
மாநில இந்து
வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில
பா.ஜ.க. அரசின்
அட்வகேட் ஜெனரல்
வி.கே.என். சவுதாரி
பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட
நூல் மனுஸ்மிருதிதான்
என்று குறிப்பிட்டார்.
இதனை ஆர்.எஸ்.எஸ்.
சின் அதிகாரப்பூர்வமான
பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது''. (மார்க்ஸ்).
இந்து
தர்மாச்சாரியார்களும் மத அடிப்படைவாத
அமைப்புகளான B J P , R S S , V H P மற்றும் ஹிந்து
ராஜியத்துக்காக போராடும் இயக்கங்களும் மனுவைப் புறக்கணிக்க
விரும்பியதில்லை.
இன்றைய
கால இந்தியாவை
மீண்டும் மனுஷ்மிர்தியுடைய
அரசியல் சட்டதிட்டங்களுக்கு
உட்பட்ட சதுர்வர்ண
நான்குஜாதி தர்மமான அந்த ஒரு வாழ்க்கைமுறையை
கொண்டுவருவதற்குB J Pயும் R S S ம்
V H Pயும் மற்றும்
சங்க பரிவார்
அமைப்புக்களும் ஒரு புதிய திட்டத்தை தீட்டி
எல்லா ஹிந்துக்களும்
ஓன்று தான்
என்றும்
ஹிந்து தர்மத்துக்கும்
மனுதர்மத்துக்கும் மாற்றமாக செயல்படுவதாக
விளம்பரம் செய்து
தீண்டாமை இப்போது
ஹிந்து
மதத்தில் இல்லை என்று பொய்பிரசாரம் செய்து
ஒரு ஹிடன்
அஜண்டாவை வைத்து
பிராமணர்களின் முன்னேற்றத்துக்காக செயல் பட்டு கொண்டிருக்கின்றனர்.
அமைதியான இந்திய
திருநாட்டில் மீண்டும் ஜாதிய ஆட்சியை கொண்டுவருவதற்கும்
அதற்க்கு ஓட்டு
கிடைப்பதற்கும் அவர்களுடய மனுதர்ம தீண்டாமையில் தள்ளிவைத்த
க்ஷூத்திரனையும் சண்டாளனையும் உபயோகபடுத்தி கொடும் கலவரங்களையும்
மற்றும் செய்து
எப்படியாவது அந்த பார்ப்பன தீண்டாமை காலத்தை
உருவாக்க அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து
வருகின்றனர்.
மனுதர்ம
சாஸ்த்திரம் எப்போதும் அவர்களுடைய முக்கிய வாழ்
வாதரமாகும் என்று நிருபிக்க விசுவ இந்து பரிஷத்
1982 −ல் நிகழ்த்திய
ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒரு
பிரதி எடுத்துச்
செல்லப்பட்டது.
இந்தச்
சாதிய அமைப்பை
நிலை நிறுத்தும்
மனுதர்ம சாஸ்திரத்தை
ஓர் உண்மையான
இந்துவால் புறக்கணிக்க
முடியாது. ஒரு
உண்மையான ஹிந்து
மனுதர்மத்தை ஏற்று அவைகள்கூறும் நான்குஜாதிய அடிப்படையில்
வாழ்ந்து வருபவர்களைத்தான்
ஹிந்து மக்கள்
என்று அழைக்க
படுகின்றனர்
நீங்கள்
ப்ராமினரோ க்ஷத்ரியரோ
வைஷ்ணரோ க்ஷூத்ரனோ
இந்த நாங்கிலும்
இல்லாத பிணத்தின்
ஆடையை மட்டும்
உடுத்தி தேங்காய்
தொட்டியில் (சிரட்டையில்)மற்றும் மன்பாதிரத்தில் மட்டும்
உன்ன குடிக்க
மனுவால் விதிக்க
பட்ட, சபிக்கப்பட்ட
சண்டாள ஜாதிக்காரனோ
என்று யாராக
இருந்தாலும் நீங்கள் ஹிந்துதான் என்பதை மறந்து
செயல் பட்டு
விடாதீர்கள் அப்படி நீங்கள் தன்மானத்தோடு முழு
மனிதசுதந்திரத்தோடு வாழ நினைப்பீர்களானால்
உங்களுடய மறுஜென்ம
வாழ்க்கையில் நாயாக, நரியாக, பினம்திண்ணும் கழுகாக,மலம் தின்னும்
பன்றியாக, இல்லையென்றால்
அழுகிய பிணத்தில்
ஊரும் புழுக்களாக,
அழுகிய மலத்தில்
வாழும் அருவருக்கபட்ட
பூச்சிகளாக, மிக கேடுகெட்ட உயிரினமாக வாழ
நேரிடும் என்று
மனுஷ மிருதி என்ற மனுதர்மமும் பகவத்
கீதையும் ஒவ்வொரு
ஹிந்துவையும் அடிவரை இட்டு தெளிவு படுத்தி
உணர்த்தி எச்சரிக்கையோடு
வாழ்ந்து மோக்ஷத்தை
அடைய அறைகூவல்
விடுக்கிறது.
இந்துக்கள்
அனைவரும் ஒரு
தாய் வயிற்று
மக்கள் என்று
உரக்கப் பேசி
வருபவர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்!
சமூக
நீதிக்கும் மனிதநேயத்திற்கும் மனுநீதி எதிரானது என்பதை
புத்தி உள்ள
நம்மால் உணர
முடிகிறது அதனால்'
இது மனித
நீதிக்கு எதிரானது
என்று வெளிப்படையாக
அறிவியுங்களேன்உங்களுக்கு நல்லதொருமணம் இருந்தால்!
முற்றும்
இது
என்னுடைய இறைவனாகிய
அல்லாஹுவிடமான பிரார்த்தனைமட்டும்.
எனது
இறைவனாகிய அல்லாஹுவே!
என்னை இந்த
நான்கு ஜாதிகளிலும்
மற்றும் சண்டாள
ஜாதியாகிய அந்த
இழிவான
ஜாதியிலும் படைககாமல்,
இப்படியான ஜாதிகளும்
ஜாதி கொடுமைகளும்
என்னவென்றும், அதன் தீண்டாமை என்ன வென்றும்
அறியாமலுமாக சுதந்திரம் படைத்த மனிதனாகவும் ஆரோக்கியமான உடலுடன்
தெளிவான நம்பிக்கயுடனுமாக
இந்த உலகில்
படைத்து உன்னுடைய
வேதத்தையும் ஞானத்தயும்கற்று தந்து உலக மக்களுக்கு முன்மாதிரியாகவும் சர்வ அதிகாரங்களும் உள்ள
உன்னுடைய படைப்புகளில்
உயர்ந்த படைப்பாகிய
மனித படைப்பாக
அதும் உன்னுடைய
துய மதமான
ஷாந்தி என்ற
பொருள் கொண்ட
இஸ்லாமில் தலை
நிமிர்ந்த முஸ்லிமாக
படைத்த உனக்கு
அனைத்துபுகளும்............
நான்
எங்காவது பிராமனனாகவோ,க்ஷத்ரியனாகவோ, ஒரு
வைஷியனாகவோ,மற்றும் க்ஷூத்த்ரனோ அதல்ல மிருகங்களைவிட
மிக மோசமாக
எண்ணப்படும் சண்டாளணாகவோ இந்த ஆர்ய மதமான
இந்த ஹிந்து சமுதாயத்தில்
பிறந்திருந்திருந்தால் ஐயகோ, நினைத்து கூட
பார்க்க முடியாத
அளவுக்கு பெரும்
நரகமாக இருக்கிற
உலகில் உள்ள
எதைகண்டாலும் அதற்க்கு அஞ்சி பெரும்
அச்சத்தோடு வாழ்ந்து , உன்மையான மனிதனின் வாழ்க்கையின்
சுகமும் சுதந்திரமும்
என்ன வென்று
அறியாமல் இப்படி
மடமையை ஒரு
பெரும் தர்மமாக
கருதி வாழ்க்கையை
கொடும் இருளிலும்
மடமையிலுமாகஹோமிக்க நேர்ந்துமிருக்கும் .
அநாகரிகமான
எத்தனை எத்தனை
அனாச்சாரங்களிலும் , ஆச்சாரங்களிலும், அனுஷ்ட்டானங்களிலும்,சதி என்ற மிகபெரும்
பெண்கொடுமைகளிலும், மற்றும் இயற்கையின்
இருளையும், வெளிச்சத்தையும், சூர்யனையும்,
சந்திரனையும், இந்திரனையும், நக்ஷத்திரங்களையும்,வானில் உள்ள
அனைத்து கோலங்களையும்,போதாதற்கு பூமியில்
உள்ள காற்று,கார் மேகம்,
மழை,நீர்,நெருப்பு, ஆறு
,மலை,மேடு,மற்றும் செடி,கொடி,மரம்,மட்டை, மண்கட்டை கல்லு,
முல்லு, ஆடு
மாடு, நாய்,நரி,பூனை,
எலி,பன்றி,ஓணான், காகம்,
கழுகு,பல்லி,கரையான்,கரயான்கூடு
எறும்பு,பாம்பு,பாம்பின்கூடு, மனிதஎலும்பு,
மண்டையோடு,
மட்டுமல்லாமல்
மனிதனையும்,மனித நிழலையும் , பேயையும், பிசாசையும்,ஆவியையும் ஓவியத்தையும்
பாவியையும்,பகைவனையும்,மலத்தையும், ஜலத்தையும், இப்படியாக
உலகிலுள்ள அனைத்திலும்
தெய்வம் உண்டு
என்று எண்ணி
அவைகளை அனைத்தையும்
வணங்கி உண்மையான
படிப்பாளனாகிய இறைவனைகண்டரியாமல் மறுஜென்மம்
என்ற மாயையை
நம்பியும் அதற்காக
மனிதனைமனிதன் வணங்கும் நிலையில் பிறப்பின் அர்த்தமே
அறியாமல் ஒருவீனான
ஒரு வெறும்
பாழ் ஜென்மமாக
வாழ்ந்து கடைசியில்
தீயில் கருக
நேர்ந்திருக்கும்!
இந்த
பெரும் மடமையில்
இருந்து காத்து
அருளிய அல்லாஹுவே
உனக்குகோடி,கோடி நன்றி........................................................................................
நன்றி
இப்படிக்கு:
K முஹமது பஷீர்
(BASHEERCOIMBATORE)
basheerdawa Google
Search
https://www.facebook.com/muhamadbasheer.basheercoimbatore.3
https://www.facebook.com/basheerdawa
EMAIL
ID:basheerdawa@gmail.com
idmaile@yahoo.in
MOBIL:+9042029992
9442240339