முஸ்லிம்களே நமக்கு என்றைக்கு பெருநாள் சிந்திக்க சில கேள்விகள்!
பிறையை புறக்கண்ணால் பார்த்துத்தான்
நோன்பு வைக்க வேண்டும்,பெருநாள்
கொண்டாட வேண்டும் என்போர் எத்தனை பேர்
தங்கள் வாழ்நாளில் பிறையைப் பார்த்து நோன்பு வைத்துள்ளார்கள் ?
எனக் கேட்டால் பெரும்பாலும்
பார்த்தது இல்லை! என்கிறார்கள் ! அப்படியானால்
பிறை பார்த்து நோன்பு வையுங்கள் , நோன்பை
விடுங்கள் என நீங்கள் கூறும்
ஹதிஸை நீங்கள் ஏன் பின்பற்றவில்லை
என்றால் 'அது யாராவது ஒருவர்
பார்த்தல் போதும் ' என்கிறார்கள் !
சமுதாயத்தில் யாராவது ஒருவர் பார்த்தால்
போதுமென்பதற்கு என்ன ஆதாரம் ?
தவறான நாளில் நோன்பைத்
துவங்கி தவறான நாளில் பெருநாள்
கொண்டாடும் அபாயத்தை உண்டாக்கி,
ஒட்டு மொத்த முஸ்லிம்களின்
அமலைத் தீர்மானிக்கும் அந்த ஒரு நபர்
யார் ? அவரின் மார்க்க நிலை
என்ன ? உண்மையாளரா ? கொள்கையில் சரியானவரா ?அவரின் விபரம் இதுவரை
வெளியிடப் பட்டுள்ளதா? அவரிடத்தில் கேட்டு உறுதிப் படுத்தியுள்ளோமா?
இல்லை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள
தலைமை காஜி இருக்கிறார் இல்லையா
? எனக் கூறுகிறார்கள் ! அவர் நம் அமல்களைத்
தீர்மானிக்க மார்க்க ஆதாரம் என்ன
? ஷிர்க் பித் அத இமாம்களை
பின்பற்றி தொழுகையை அமைத்துக் கொள்ளாதோர் பிறை விஷயத்தில் மட்டும்
ஷிர்க், பித் அத, போன்ற
செயல்களைத் தலைமை ஏற்று நடத்தும்
தலைமை காஜியை பின்பற்றி நடப்பதேன்?
பக்கத்து மாநிலத்தில் பிறை பார்த்து அறிவித்தால்
அதை இந்த காஜி ஏற்க மறுக்கிறாரே ஏன், மாநில,
மொழி, வர்ண அடிப்படையில் இஸ்லாம் பிறை விஷயத்தில் வரம்புகள் வரைந்துள்ளதோ ?
பிறைக்கான இஸ்லாமிய எல்லை வரையறை என்ன
? அதை யார் வகுத்தது ?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருவர் அருகில்
உள்ள கேரளா பிறையைப் பின்பற்ற
வேண்டுமா ? கூடாதா ?
கோவை வாளையாரில்
உள்ள இருமாநில எல்லையில் வசிக்கும் முஸ்லிகளின்
பிரைநிலைதான் என்ன?
இந்த இரு மாநில எல்லையில்
வாழும் ஒரே ஊரை சார்ந்த மக்கள் கேரளமாநிலத்தில் உள்ள
கோழிக்கோடு காஜியை
பின்பற்றவேண்டும? 550 கிலோமீட்டர் துரத்தில் உள்ள சென்னை தமிழ்நாடு
காஜியை பின்பற்ற
வேண்டுமா ?
அவர்களுக்கு அருகில் உள்ள அந்த
பார்த்த பிறையை விட்டு விட்டு
மாநில ,மொழி, இனம் ,என்ற
அடிப்படையில் அவருடைய நோம்பை , பெருநாளை
அமைத்து கொள்ள வேண்டுமா ?
இஸ்லாம் என்ன ஜாதி
இனம் , மொழி மாநிலம் மாவட்டம்
வட்டம் என்று இனவாத மார்க்கமா ?
சென்னையில் உள்ள 500 கிலோமீட்டர்
அப்பால் உள்ள தலைமை காஜியின்
அறிவிப்பை பின்பற்ற வேண்டுமா ?
ராமநாத புரம் மாவட்ட
மக்கள் 20 கிலோ மீட்டர் தொலைவு
இலங்கையில் பார்த்ததை ஏற்பதா ?
இல்லை தலைமை காஜியின்
அறிவிப்பை ஏற்பதா ?
இஸ்லாம் பிறை விஷயத்திற்கு
கிலோமீட்டர், மீட்டர் ,ஏறிய , என்றெல்லாம் வரையருத்ததுண்ட?
சந்தேகமற்ற, முழுமையை அடைந்த, நிறைந்த, தெளிவான, தூய
மார்கத்தில் உங்களை விட்டுச் செல்கிறேன்
அதில் இரவும் பகலைப் போன்றது
என நபி [ஸல் ] கூறியிருக்க
இதில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்
?
முழுநிலவு அன்று வரும் சந்திர
கிரகனத்தையும், அமாவசை அன்று வரும்
சூரிய கிரகனத்தையும் 3000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்ல முடியும்
என்றிருக்க அறிவியல் கணக்கீட்டால் முதல் பிறையை மட்டும்
அறிய முடியாதா ?
நாட்களையும், மாதங்களையும், வருடங்களையும் கணக்கிட்டு மனிதர்களின் அவர்களுடைய வாழ்க்கையின் நித்திய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வும்
காலக்கனக்குகளை அறிந்து கொள் வதற்க்காக்கவும்
வேண்டியும் மற்றும் அல்லாஹு சந்திரனை
படைத்திறுக்கின்றேன் என்று
குர் ஆனில் மிக தெளிவாக
கூறி இருக்கும் பொழுது, கணக்கிடுவது
கூடாது என்று கூறும் இவர்கள்,
ஏன் முன் கூட்டியே தங்களுடைய
அமைப்புகளின் பெயரில் நாள்க்கட்டிகளை அச்சடித்து
விற்பனை செய்து விடுவது மட்டுமல்லாமல், தொழுகை
நேரத்திற்கு,ஸஹர், இஃப்தாருக்கு மட்டும்
சூரியனைப் பார்த்து முடிவு செய்யும் நபிவழியை
கை விட்டு கடிகாரத்தின் மூலம்
தீர்மானிக்கும் முறைக்கு மாறியதும் ஏன்
?
நிலவின் பலவித படித்தரங்கள்.
“மட்டுமா பிறை விஷயத்தில் குர் ஆன் கூறுவதை கவனியுங்கள்:”
1.
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ
نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُواْ عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا
خَلَقَ اللّهُ ذَلِكَ إِلاَّ بِالْحَقِّ يُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை
ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின்
எண்ணிக்கையையும், காலக்கணக்கையும்
நீங்கள் அறிந்து கொள்ளும்
பொருட்டு(ச் சந்திரனாகிய)
அதற்கு மாறி மாறி
வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்;
அல்லாஹ் உண்மை(யாக தக்க
காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள
மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
சந்திரனை சூரியனிலிருந்து
ஒளியை பெற்று அதன் காரணமாக
பிரதிபலிப்பின் மூல மாகவும், ஒளிவுள்ளதாகவும்
ஆக்கினான் என்று கூறுவதில் ஒரு
பெரும் அத்தாச்சியுள்ளது . மட்டுமல்லாமல்
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் மனிதர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு
மாறி மாறி வரும் பல
படித்தரங்களை உண்டாக்கி
யதாக அல்லாஹு கூறுகிரான். இந்த குர்
ஆண் வசனத்தை கூர்மையுடன் கவனிக்கும்
சாதாரண அறிவுள்ள எந்த ஒரு மனிதனுக்கும்
புரிந்து கொள்ளும் முறையில்த்தான் அல்லாஹு இந்த வசனத்தின்
வாயிலாக இதை
விளக்கி கூறியுள்ளான்...........
மேலும் பாருங்கள் இந்த
வசனத்தையும்.
- وَجَعَلْنَا
اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا
آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُواْ فَضْلاً مِّن رَّبِّكُمْ
وَلِتَعْلَمُواْ عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ
تَفْصِيلاً
17:12. இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள்
இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும்,
காலக் கணக்கையும் நீங்கள்
அறிந்து கொள்வதற்காகவும்
இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து
பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு
பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.
2:189. (நபியே! மாதந்தோறும்
பிறந்து, வளர்ந்து, தேயும்)
பிறைகளைப் பற்றி உங்களிடம்
கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள்
கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு
(ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய
காலங்களை(யும்) அறிவிக்கக்
கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
இந்த குர் ஆன்
வசனத்தை பாருங்கள் பிறைகளை பற்றி அவர்கள்
கேட்கின்றனர் என்று தான் அல்லாஹு
கூறுகிறான். பிறையை பற்றியல்ல அதன்
படித்தரங்களை பற்றி அந்த காலத்துமக்கள்
பிறைகளில் வளர்ச்சி மற்றும் தேய்வு நிலை
என்று அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர். மட்டுமல்லாமல், அல்லாஹு பிறையின் மாதத்தின்
கடைசிநிலையை பற்றி கூறுவதையும் பாருங்கள்.
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ
الْقَدِيمِ
36:39. (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச
மடலைப் போல் (பிறையாக) ஆகும்
வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை
ஏற்படுத்தி இருக்கின்றோம்.

வளர்ந்து முழு நிலையை அடைந்த
ஒருமாதத்தின் அந்தபிரை அந்த மாதத்தின் கடைசிநாளில்
பழைய பேரீச்ச மடலைப் போலாகும்
என்று அதன் படைப்பாளனாகிய அல்லாஹு
கூறுகின்றான்.
சகோதரர்களே நம்முடைய
வாழ்க்கையில் என்றாவது இப்படியான அதிகாலையில் தோன்றும் இந்த உர்ஜுனுள் கதீம் என்ற பிறையின்
கடைசி கட்டத்தை கண்டதுண்டா ? அப்படி காணவேண்டும் என்று
இந்த நிறமத வாதிகளான தலைவர்கள்
நம்மை படிப்பித்ததுண்ட அறிவூட்டியதுண்டஎன்ன ?
இந்த நிலவு சூரியன்
மற்றும் நட்சத்திரங்களுக்கு அல்லாஹு ஏற்ப்படுத்திய ஓட்டத்தின்
கணக்குகளையும் அதற்க்கான நேரங்களையும் அவைகளின் பயணத்திற்கான காலநிர்ணயத்தயும் வரையறுத்து கொடுத்ததை பற்றி
அல்லாஹு துல்லியமாக
கூறுவதை பாருங்கள்.
36:38. தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது
அனைவரையும் நன்கறிந்தவனும் மிகைத்தவனுமால் அமைக்கப்பட்டது.
அதற்க்கான கணக்கில் மட்டும் தான் அது
சென்று கொண்டிருக்கிறது. இந்த கணக்கை நாம்
ஆராய்ந்து ஒரு நிர்ணயமான நாட்காட்டியை
என்றென்றைக்குமாக தயாரிக்க முடியாதா.?
36:40. சூரியன் சந்திரனை அணுக
முடியாது. இரவு பகலை முந்த
முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும்
தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
இங்கு தெளிவாக அல்லாஹு
கூறு வதை பாருங்கள்
ஓன்று ஒன்றை முந்த முடியாது
என்று. இந்தகணக்கை வைத்து முன்கூட்டியே ஒரு
சந்திர நாட்காட்டியை தயாரித்தால் அதில் எந்த விதத்தில்
தவறுகள் வந்துவிடும். அதை கணக்கிட முடியாதா?
அதன் ஓட்டத்திற்கு ஒரு நிர்ணயம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் கணக்கில் எப்படி
தவறுகள நேரிடும் அப்படி நேரிட்டதுண்ட ? அப்படி
தவறுகள் நிகழ்ந்ததை இந்த மூட டர்கள்
நிருபிக்க தயார.?
1. يُولِجُ اللَّيْلَ فِي
النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ
كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ وَالَّذِينَ
تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
35:13. அவனே இரவைப் பகலில்
புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்.
சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான்.
இவை அனைத்தும் அவைகளுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்.
எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவைகளை நீங்கள் (இறைவனென
உதவிக்கு) அழைக்கின்றீர்களோ அவைகளுக்கு ஓர் அணு அளவும்
அதிகாரமில்லை.
இந்த வசனத்தை கூர்ந்து
கவனியுங்கள். அல்லாஹுவாகிய அவனே இரவைப் பகலில்
புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்.
சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான்.
இவை அனைத்தும் சுழல்வதர்க்கான ஒரு வழி பாதையையும்
அமைத்து கொடுத்திருக்கின்றான். அவைகள் அனைத்தும் அவைகளுக்குக்
குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. நிலவும் சூரியனும் ஒரு
நிர்ணயத்தின், கணக்கின், தவணையின் அடிப்படையில் மட்டும் தான் சுழன்று கொண்டிருக்கின்றன.
இந்த கணக்கு நாம்
புறக்கண்ணால் பார்த்துவிட்டு எழுதிவைக்கும் கணக்கா ? இல்லை பல்லாயிரம்
வருடங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அதன் ஓட்டத்தை வைத்து
நிர்ணயித்து முன்கூட்டியே எழுதிவைக்க படவேண்டிய கணக்கா.?
நிச்சயமாக அல்லாஹு நிர்ணயித்து வைத்த
இந்த கணக்கின் அடிப்படையில் கணக்கிட்டு அந்த கணக்கின் முறையில்
துல்லியமாக நம்முடைய அனைத்துவித வணக்கவழிபாடுகளையும் மற்றும்
வாழ்க்கையின் மற்று காலதேவைகளையும் பூர்த்திசெய்யமுடியும்
என்று இந்த குர் ஆண்
வசனங்களின் மூலம் நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
“மனிதர்களாகிய நாம் காலத்தின்
கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான் என்று அல்லாஹு கூறும்
வசனத்தை பாருங்கள்.”
1. فَالِقُ الإِصْبَاحِ
وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَلِكَ تَقْدِيرُ
الْعَزِيزِ الْعَلِيمِ
6:96. அவனே (பொழுதை) விடியச்
செய்பவன். அவனே (நித்திரை செய்து
நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள்
காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும்
சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவனும்,
மிக்க அறிந்தவனு(ம் ஆகிய அல்லாஹ்
உ)டைய ஏற்பாடாகும்.
சந்திரனை அல்லாஹு படைத்ததின் நோக்கம் மனிதனுக்கு அவனுடைய
வாழ்க்கை தேவைக்கான நாட்காட்டிதேவயையும் பூர்த்திசெய்யவதற்க்காகவும் வேண்டியும்
மாக என்று அல்லாஹு இந்த
வசனத்தில் கூறும் போது, காலத்தை
நிர்ணயிப்பது கூடாது அதில் தவறுகள்
ஏற்ப்படும் அதனால் புறக்கன்னல் பார்த்துவிட்டு
அந்தந்த மாதங்களின், அந்த மாதத்தின் முதல்
நாளை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறும் இந்த இஸ்லாமிய தலைவர்கள்
குரான் கூறும் இந்த கணக்குகள்
என்ன வென்று தெளிவு படுத்துவார்கள?
اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا
ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي
لأَجَلٍ مُّسَمًّى يُدَبِّرُ الأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُم بِلِقَاء
رَبِّكُمْ تُوقِنُونَ
13:2. வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள்
கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது
அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு)
உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும்
தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்)
குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து
வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே
திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று)
உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய)
வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து
அறிவிக்கிறான்.
இந்தவசனம் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்
அல்லாஹுவாகிய அவனே சூரியனையும் சந்திரனையும்
தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். அவைகளுக்கு நாதியற்றநிலை அல்லாமல் இவை
கள் ஒவ்வொன்றும்
அவற்றிற்குக் குறிப்பிட்ட நினயித்துகொடுத்த கால திட்டட்தின்ப்படி நடந்து
வருகிறது. அவற்றில் நடைபெறும் சலக காரியங்களையும் அவனே
திட்டமிடுகின்றான். இந்த திட்டத்தை பற்றி
கணக்கை பற்றி இவர்கள் என்ன
கூறுகிறார்கள் ?
1. وَسَخَّر لَكُمُ
الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
14:33. (தவறாது) ஒழுங்காக நடைபெற்று
வருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயனளிக்கக் கூடிய விதத்தில் (படைத்து)
அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய
இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய
வகை செய்தான்.
“ஹஸ்பியால்லாஹ் நமக்கு அலாஹுமட்டும் நமக்கு
போதுமானவன்”
இந்த வசனம் கூறுவதை
கவனியுங்கள்: வானத்தில்
இருக்கும் சூரியனும் சந்திரனும் மிக தெளிவான கணக்கின்
அடிப்படையில் மட்டும் தான் சுழன்று
கொண்டிருக்கின்றன என்று நமக்கு தெரியவில்லை
என்பதற்காக நாட்களை
மாதங்களை முன் பின் படுத்துவது
எவெவ்வளவு பெரிய
மூடத்தனம். அதைப்பற்றி
யும் குர் ஆன் கூறுகிறது.
9:37. (போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி)
முன் பின்னாக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றது. இதனால் நிராகரிப்பவர்களே வழி
கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி
மாதங்களை முன் பின்னாக்கி) ஓர்
ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக்
கொள்கின்றனர். மற்றொரு ஆண்டில் (அதே
மாதங்களில் போர் புரிவது கூடாது
என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு
அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின்
எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின்
எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும்
தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த)
மக்களை அல்லாஹ் நேரான வழியில்
செலுத்துவதில்லை.
அந்த காலத்து மக்கள்
அல்லாஹு நிர்ணயித்த மாதங்களை நாட்களை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப
முன்பின் செய்ததை அல்லாஹு நிராகரிப்பு என்று
குறிப்பிடுகிறான் அவர்களை போலவே இவர்களும்
தங்களுடைய விருப்பத்திற்கேற்ப அல்லாஹு நிர்ணயித்த நாட்களையும்
மாதங்களையும் முன் பின் ஆக்குகின்றனர்
அல்லாஹுவின் மீதுள்ள அச்சம் இல்லாமல்.
இப்படி இருக்கும் இவர் கல் என்னதான்
தவ்ஹீதை ஏற்று நடந்தாலும் போருக்கு
பயந்து அந்தமக்கள் செய்த செயலையே இந்த
மக்களும் செய்வதினால் அந்த வார்த்தை இவர்களுக்கும்
பொருந்தாதஎன்ன? இவர்கள் தான் விளக்க
வேண்டும்.
1. وَسَخَّرَ لَكُمُ
اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ
بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
16:12. அவனே இரவையும், பகலையும்,
சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான்.
(அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே
இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய
மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
சிந்திக்கும் மக்களே இவைகளில் நேர்வழி
அடைவார்கள். அல்லாதவர்கள் ஆட்டு மந்தயயைபோன்று இந்த
மூட தலைவர்களை பின்பற்றி அமல்களை முன்பின்னாக்கி தங்களுடைய
தலைவர்களின், அமைப்புகளின் மனோ இச்சைகளுக்கு
வழங்கி வாழ்ந்து தங்களுடைய மறுமையை இழந்து விடமாட்டார்களாஎன்ன.?
22:18. (நபியே!) வானங்களில் இருப்பவர்களும்,
பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும்
நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர்
என்பதை நீங்கள் காணவில்லையா? எனினும்,
மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு
விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ
அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கின்றான்.
சூரியனும் சந்திரனும் மற்றும் அல்லாஹுவுக்கு கட்டு
பட்டு வாழ்கின்றன அதில்
அவைகள் எந்த முன் பின்களுகளும்
செய்வதில்லை அப்படியிருக்க நாம் முன்கூட்டியே நிர்ணயிக்கும்
கால கணக்கில் தவறுகள் வருமா?
1. أَلَمْ تَرَ أَنَّ
اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ
وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَى أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ
اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
31:29. (நபியே!) அல்லாஹ்தான் இரவைப்
பகலிலும் பகலை இரவிலும் நுழைய
வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி
வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில் ஒவ்வொன்றும்
(அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட
திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்லாஹு அவைகளுக்கு வகுத்து
கொடுத்த திட்டத்தின் படி கணக்கின் படி
மட்டும் தான் அவைகள் இன்றளவும்
இனியும் செயல் படும் என்று
அப்படி இருக்க எப்படி கணக்கில்
தவறுகள் யெர்ப்படவாஇப்புகல் வரும் இவர்களின் கண்ணு
க்குதேரியவிள்ள என்ற காரணத்தில் தவறவிடும்
நாட்களுக்கு யார்பொருப்பு ?
1. خَلَقَ السَّمَاوَاتِ
وَالْأَرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ
النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي
لِأَجَلٍ مُسَمًّى أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
39:5. அவன், வானங்களையும் பூமியையும்
உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச்
சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே
பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்.) சூரியனையும், சந்திரனையும்
அடக்கி வைத்திருக்கின்றான்.
இவை ஒவ்வொன்றும், அவைகளுக்குக்
(குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட
காலப்படி நடக்கின்றன.
(நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் அனைவரையும் மிகைத்தவனும்
மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் அல்லாஹு ஏற்ப்படுத்திய கணுக்குகள்
வரையறைகள் புரப்படுமிடம் சேருமிடம் தங்குமிடம் என்றெல்லாம் இருக்கும்போது எப்படி அதிலதர்க்கு எதிராக
ஓரிரு நாட்கள் முன்பின் ஆகுகின்றன மாற்றங்கள்
நடக்கின்றன.?
1. وَجَعَلَ الْقَمَرَ
فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
71:16. அவனே, அவைகளில் சந்திரனைப்
பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும்
அமைத்தான்.
இதை எதற்காக செய்தான்
நமக்கு தெளிவாக கணக்கை அறிந்து
கொள் வதற்கு வேண்டி மட்டுமல்லவா
இப்படி செய்தான். இல்லையென்று
உங்களால் கூற முடியுமா ?
1. تَبَارَكَ الَّذِي جَعَلَ
فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا
25:61. (அந்த ரஹ்மான்) மிக்க
பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரியனை) ஒளியாகவும்,
சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான்.
29:61. (நபியே! நீங்கள் அவர்களை
நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?" என்று அவர்களைக் கேட்பீராயின்
அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.
சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே கணக்கின்படியே
நடக்க செய்கின்றான்.
31:29. (நபியே!) அல்லாஹ்தான் இரவைப்
பகலிலும் பகலை இரவிலும் நுழைய
வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி
வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில்
ஒவ்வொன்றும் (அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே
நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.
கணக்கை மட்டும் கூறும்
குர் ஆன் வசனத்தை பாருங்கள்
அனைத்துக்கும் கணக்கு இருக்கிறது. இந்த
கணக்குகள் என்பது நாம்
புரக்கண்களில் பார்த்து விட்டு எழுதும் கணக்கா?
இல்லை உலகம் படைத்த நாள்முதல் இறுதி
நால்வரைக்குமாக அல்லாஹு திட்டபடுத்தி வைத்த
கணக்கா ? அதை இவர்கள் முதலில்
தெளிவு படுத்த வேண்டும். இவர்கள் உண்மையான
நம்பிக்கயாளர்களாக இருந்தால்.
41:37. "இரவும், பகலும், சூரியனும்,
சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன.
ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே
வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும்
சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ
அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும்
நபியே! நீங்கள் கூறுங்கள்.)
55:5. சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே
(செல்கின்றன).
84:18. பூரணச் சந்திரன் மீதும்
(சத்தியமாக!)
பூரண சந்திரன் என்பது
நாம் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்த பிறகு
உண்டாகும் அந்த மாதத்தின் 16,17, வது
பிறைகள் அல்ல,
அந்த மாதத்திற்கான நாள் தோன்றிய நொடியில்
இருந்து உருவாகி முழு நிலையை
அடைந்த பிறையை பற்றியே
இங்கு முழு நிலவு அதாவது
பூரண சந்திரன் என்று கூற ப்படுகிறது...........
91:2. (அது அஸ்தமித்ததற்குப்) பின்
உதயமாகும் சந்திரன் மீதும்,
இங்கு அஸ்தமித்ததற்குப்பின் உதயமாகும் சந்திரன்
என்பது அந்த மாதத்தின் முதல்
பிறையை பற்றியாகும். அல்லாமல் முதல் பிறை
என்பது அந்த மாதம் தோன்றி
48 மணிநேரம் கழிந்து நம்முடைய புறக்கங்களுக்கு
நம்முடைய ஊர்களில் நம் அனைவருக்கும் தென்பெடும்
அந்த மாதத்தின் மூற்றாம் பிறைகளையல்ல.
இந்த விதமாக
பிறைகளை பற்றி கூறிய
வசனங்களில் அனைத்திலும் கணக்கு, கணக்கு
என்றுமட்டும் கூறும் குர்
ஆன் வசங்கள் இருக்கும்
நிலையில் அதை முற்றிலுமாக
மாற்றிவைத்து விட்டு, அதை
கவனிக்காமல் தங்களுக்கு ஏற்றார்ப்போல்
வருடத்திற்கு ஒருமுறை, இரண்டு
முறை மட்டுமாக மக்ரிப்
தொழாத ஏதாவது நபர்களை
நம்பி யாராவது பார்த்ததாக கூறி
விட்டதாக நாம் அறிந்தால்
மட்டும் போது மானதாக
ஏற்றுக்கொண்டும், அது உண்மையா
பொய்யா என்று கூட
பார்க்காமல் ஆட்டு மந்தைகளாகிய நம்மை மேய்த்து
கொண்டிருக்கும் அந்த இடையர்கள்
கூறுவது மட்டும் வேத
மாக எண்ணி அல்லாஹுவும்
குர் ஆணும் நபிமொழியும்
நபிவழியும் என்று அனைத்தையும்
ஓரம் தள்ளி விட்டு அவர்களுடைய விருப்பத்திர்ர்க்கேர்ப்ப
அவர்கள் கூறுவதை வைத்து
வாழ்க்கையை நடத்திகொண்டிருக்கும்
நாம் சிந்திக்க வேண்டாமா
என்ன?
நம்முடய மறுமைக்கு
இவர்கள் தரும் உத்திரவாதம்
மட்டும் போதுமாஎன்ன.?
சூரியனும் சந்திரனும்
கணக்கின் படியே உள்ளன
என அல்லாஹ் கூறும்
போது ஒரே ஒரு
சந்திரன் ஊருக்கு ஊரு
மாவட்டத்துக்கு மாவட்டம் மாநிலத்துக்கு
மாநிலம் மற்றும் நாடுகள
என்று சவுதியில்
29 நாளும் இங்கு 30 நாளும்
சுற்றுமா ? சிந்தியுங்கள்
!
“நமது அண்ணன்
PJ “ இலங்கை நிகழ்ச்சி ஒன்றில்
கூறியதைப்போல ஒன்றாவது மற்றும்
இரண்டாவது" நம்முடைய புறக்கண்ணால்
பார்க்கமுடியாததின் காரணத்தினால் அந்த
பிறந்த சந்திர மாதத்தின்
24,மற்றும் 48 மணி நேரத்திற்கு
பிறகுதான் நம்முடைய புறக்கண்ணால்
பார்த்துவிட்டு அந்த மாதத்தின்
மூன்றாவது நாளை நம்முடைய
ஒன்றாவது நாளாக தத்தம்
பகுதியினர் முடிவு செய்து
கொள்ள வேண்டியது தான்
என்ற நிலையில் இந்த
உயர்ந்த சமுதாயத்துக்கு
இந்த பிறை விஷயத்தில்
ஒரு ஒற்றுமை என்பது
சாத்தியம் ஆகாத ஓன்று
என்று கூறி ஒதுங்கி
விடுவதும் சரியா.? அப்படியானால்
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இவர்களுடைய அமைப்புகளின்
பெயரில் அரபிமாசத்திற்க்கான
12 மாதத்தின் நாட்காட்டிகளை அச்சிட்டு
வெளிடுவதும் சரியா? நபி
ஸல் காலத்தில் அப்படி
ஒரு இஸ்லாமிய நாட்காட்டி
பள்ளிகளில் இடம் பெற்றிருந்தத?பிறைகளை
புறக்கண்ணால்
பாப்பதர்க்கு முன்னதாகவே இவர்கள் முகூட்டி
நாட்காட்டிகளை அச்சிடுவதற்கு ஹதீஸில்
என்ன ஆதாரத்தை வைத்திருக்கிறார்கள்?
இந்த விஷயத்தில் குர் ஆணை
புறக்கணித்து விட்ட இவர்களுடைய
செயல்கள் எப்படி வெற்றிகளை
காணும் ஒருக்காலும் இவர்கள்
வெற்றியை அடைய மாட்டார்கள்
அது நிச்சயம்...................








