Wednesday, August 16, 2023

உளவியல் ஒரு அடிப்படை அறிமுகம்.!

உளவியல் ஒரு அடிப்படை அறிமுகம்.! மனித இனத்தின் ஆரோக்யமான வாழ்விற்கு ஆரோக்கியம் மிகுந்த உடல் மட்டும் சிறந்ததாக இருந்தால் போதும் என கருதிவிட முடியாது, உடல் ஆரோக்கியத்தை போலவே மனிதனின் மன ஆரோக்கியமும் அவனுடைய நிறைந்த முழுமை பெற்ற வாழ்விற்கு சிறந்த ஒற்றாக இருக்கமுடியும். மனநோய் பற்றிய சில உண்மைகள்!. நம் நாட்டில் மக்கள் தொகையில் பெரும் சதவீதம் பேர் மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனநோயினால் அவதியுற்று வருகின்றனர் மனிதனின் உடலைப்போன்றே அவனுடைய மனமும் எப்பொழுது வேண்டுமானாலும் நோயுறலாம். அதை சரியான நேரத்தில் சரியான அணுகுமுறையில் கண்டறிந்தால் மனகுறைபாடுகளைமற்ற உடல் ரீதியிலான நோய்களை போன்றே அதாவது, தலைவலி, காய்ச்சல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் போன்ற உடல் நோய்களைப் போலவே மனநோயையும் எளிதில் குனபடுத்த முடியும். மனிதின் சுற்றுச்சூழல்தான் அவனை மனநோய்க்கு அவனை தள்ளி விடுகிறது. அவனை சார்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் அவனுடைய மனநிலை பிரச்சனைகளுக்கு பெரிதும் காரணமாகின்றன. மனநோய்கள் பில்லி, சூனியம், ஏவல், கிரகங்கள் பதிப்பு அகியவற்றின் காரணமாக எற்படுவதில்லை. மரபு வழி சாத்தியக் கூறுகள் மற்றும் மன உலைச்சல்கள் ஆகியன மூளையில் எற்படுகின்ற இரசாயன மாற்றங்களால் தான் மன நோய்கள் ஏற்படுகின்றன. மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் தெய்வ வழிபாட்டு தளங்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது. மனநோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துக்கள் உட்கொள்ளுதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, மனோநோயாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் நடந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மனநோயாளிகளை எளிதில் குணப்படுத்தலாம். மனநோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, ஆரம்ப நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்தல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளாமை, குடும்பத்தாரின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் எதிர்மறையான பார்வை ஆகிய காரணங்களால் தான் மனநோய்களை கையாளுவது கடினமாக உள்ளதே தவிர மற்றபடி மனநோய்களை போன்று முழுமையாக குணப்படுத்தக் கூடியவையே. மனச்சோர்வு நோய் (Depression): மனக்கவலை, அதிகாலை தூக்கமின்மை, மிகுந்த சோர்வு, பசியின்மை, எடை குறைவு, அடிக்கடி அழுதல், தன்னம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை, அதிகமான குற்ற உணர்வு, அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் மனச்சிதைவு நோய் (Schizophrenia): தொடர் துக்கமின்மை, தனக்கத்தானே பேசிக் கொள்ளுதல், தனக்கத்தனே சிரித்துக் கொள்ளுதல், காதில் மாயக்குரல்கள் கேட்டல், அதிகமாக சந்தேகப்படுதல், அவைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு, சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான நம்பிக்கை, உடல் தூய்மை படிப்படியாக் குறைதல் மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder): நெஞ்சு படபடப்பு.கை நடுக்கம், அதிகமாக வியர்த்தல், நெஞ்சுவலி, கவனம் செலுத்த இயலாமை, தூக்க குறைவு, அடிக்கடி எரிச்சல் அடைதல், எதிர்மறையான எண்ணங்கள் · தனிமையில் இருக்க பயம், பயம் நோய் (Phobia), கூட்டத்தினைக் கண்டுபயம், புதிய நபர்களை எதிர்கொள்ள பயம், உயரமான இடங்களுக்கு சென்றால் பயம், மூடிய இடங்களை கண்டு பயம் ,இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க நினைத்தும் இயலாத நிலை எண்ணம் மற்றம் செயல் சுழற்சி நோய்: திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவத, தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை, ஒரு நாளின் பெரும் பகுதி இனம் புரியாத எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடும்சூழல், திரும்ப திரும்ப ஒரே செயலை செய்து கொண்டு இருப்பது உதாரணமாக: திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்,பூட்டினபூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது, பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது, ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது, தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனபதற்றமும் ஏற்படுவது, குழிப்பரையில் குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது, ஆளுமை கோளாறுகள் (Personality Disorders): அடிக்கடி கோபம் கொள்ளுதல், குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள், மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல், உடல் உறுப்புகளை தானே காயப்படுத்திக் கொள்ளல், கலவரங்களில் ஈடுபடுதல், சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல், மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல், பெற்றோர்களுக்கு கீழ்படியாமை, எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல், எப்பொழுதும் பதற்றமாக இருத்தல், பெண்களும் மனநோய்களும்: மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக,அதிக எரிச்சல்,அதிகமான கோபம் சோர்வு, பதற்றம், இவை சில நேரங்களில் மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும் கர்பிணி பெண்களும் மனநோய்களும்: குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை, அடிக்கடி அழுதல், சரியான தூக்கமின்மை, போதிய பசியின்மை, நிரந்தர தற்கொலை எண்ணங்கள், தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல் முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்: தொடர் தூக்கமின்மை, மறதி, பொருட்களை வைத்த இடத்தை மறத்தல், நாள், கிழமை மறந்து விடுவது, உறவினர், நண்பர்களை மறந்து விடுவது, அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது, பசியின்மை மாற்ற இதர மனநோய்கள்: சாமியாட்டம், புகை பிடித்தல், மது அருந்துதல், கணவன் மனைவி பிரச்சனைகள், மனரீதியான பாலியல் பிரச்சினைகள்,மற்றும் பாலியல் ஒவ்வாமைகள். குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்: குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல், படிப்பில் கவனம் குறைதல், அதிக கோபம் கொள்ளுதல், · படுக்கையில் சிறுநீர் கழித்தல், அடிக்கடி எரிச்சல் அடைதல், மிக மிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD) கீழ்படியாமை, அடிக்கடி பொய் சொல்வது, திருடுவது, குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell), வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது) மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums),நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance), குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Separation anxiety disorder. மன நோய் அதன் துவக்கத்தில் முறையாக கண்டறிந்தால் அதை முற்றிலும் இல்லாமல் செய்து நல் நல்வாழ்க்கை பெற நாம் நாடினால் எழிதில் நடக்ககூடிய ஒன்றுமட்டுமே. K,முஹமத் பஷீர். கோயம்புத்தூர். தொலை பேசி எண்:9442240339,9042029992

Saturday, June 25, 2022

ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் ஏ, சி, ஈ, பைட்டோ கெமிக்கல்களான பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும். எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இந்த உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, சருமமும் அழகாக மின்னும். அதுமட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இப்போது அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைப் பார்ப்போமா! கிவி வைட்டமின் சி அதிகம் உள்ள மற்ற பழங்களைப் போன்றே, கிவிப் பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பரட்டைக்கீரை இந்த பச்சை இலை காய்கறியில் பாலிஃபீனோலிக் ஃப்ளேவனாய்டு என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாவது தடுக்கப்படும். பசலைக் கீரை கீரைகளில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக பசலைக் கீரையில் லுடீன் (lutein), ஸீக்ஸாக்தைன் (zeaxanthin) என்னும் கரோட்டினாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது மூளையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். அவகோட அதிலும் அல்சீமியர் நோய் அவகேடோ அவகேடோவில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, பொலிவோடு இருக்கும். களைக்கோசு இதில் பைட்டோ கெமிக்கல் அதிகம் இருப்பதோடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீட்ரூட் பூட்ரூட்டில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட்டாகவும் இருக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ப்ராக்கோலி மற்ற பச்சை இலைக் காய்கறிகளைப் போன்றே, ப்ராக்கோலியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடவும் சிறந்ததாக உள்ளது. ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் இந்த ஆப்பிளிலும் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பூண்டு பூண்டில் ஆன்டி பயாடிக் பொருள் அதிகம் உள்ளது. அதே சமயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, பி மற்றும் சி, செலீனியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவையும் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள இரத்த அழுத்தம் குறைகிறது. குடைமிளகாய் குடைமிளகாயில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே எந்த வகையான குடைமிளகாயையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. பீன்ஸ் அனைத்து வகையான பீன்ஸிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்வது சிறந்ததாக இருக்கும். பெர்ரிப் பழங்கள் பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் புரோட்டீன், வைட்டமின் மற்றும இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றிவிடும். மாதுளை சுவை மிகுந்த பழமான மாதுளையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வருவது நல்லது. தக்காளி தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, உடல் எடையை குறைக்கலாம். Green tea உலக அளவில் க்ரீன் டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று இந்த அளவிற்கு அப்படி இந்த க்ரீன் டீயில் என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் க்ரீன் டீயில் தான் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் நீங்கள் வெறுமனே தேநீர் குடிக்கும் போது அதில் காஃபைன் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் க்ரீன் டீயில் காஃபைன் அளவு குறைவு. நீங்கள் க்ரீன் டீயை குடித்து வரும் போது உங்க இரத்தத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அளவு அதிகமாகிறது. அறிவோம் க்ரீன் டீ என்றால் என்ன பிளாக் டீயை ஒப்பிடும் போது க்ரீன் டீ தேயிலை இலைகள் குறைந்த ஆக்ஸினேற்ற செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த இலைகளின் இயற்கையான பண்புகள் தக்க வைக்கப்படுகிறது. ஆனால் பிளாக் டீயை பொருத்து வரை இலைகள் முழுமையாக ஆக்ஸினேற்றம் செய்யப்படுகிறது. க்ரீன் டீ இலைகளில் எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) என்ற பண்பு உள்ளது. இது நம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த இலைகளில் காணப்படும் கேடசின்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் காபியை விட ஒரு கப் க்ரீன் டீயில் கால் பங்கு அளவிற்கு காஃபைன் உள்ளது. காஃபைனும் எடை இழப்புக்கு மிக அவசியமான ஒன்று. க்ரீன் டீ குடித்து வந்தால் உங்க உடற்பயிற்சி செயல்திறன் அதிகமாகவும், கொழுப்பை நன்றாக எரிக்கவும் முடியும். க்ரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கு முதலில் அந்த கொழுப்பை உடைக்க வேண்டும். எனவே இந்த வேலையை செய்ய க்ரீன் டீயில் உள்ள சேர்மங்கள் நோர்பைன்ப்ரைன் (நோராட்ரெனலின்) போன்ற கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. இது நம் உடலில் சுரக்கும் என்சைம்யை தடுத்து நோர்பைன்ப்ரைன் அளவை அதிகரித்து கொழுப்பை உடைக்கிறது. அப்படியே உங்க கொழுப்பு செல்கள் கொழுப்பை உடைக்கும் வேலையை செய்கிறது. பிறகு இவை இரத்த ஓட்டத்தில் கலந்து தசை செல்களுக்கு உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ , காபி அருந்தும் நீண்ட கால பழக்கத்தையே பலரும் தவிர்த்து விட்டனர். சிலர் அதன் தொடர்ச்சியாக 'கிரின் டீ' போன்ற பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் எடையைச் சீராக வைத்து கொள்ள 'கிரின் டீ' உதவி புரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். Blue Tea சங்கு பூ டீ சங்கு பூ தேநீரார அந்தும்போது நமது உடலில் மற்றும் மனநிலைகளில் பெரும் நன்மைகள் உள்ளன! உடல் நோய்களான புற்றுநோய் ! சர்க்கரை நோய் ! கல்லீரல் நோய்களை விரட்டி அடிக்கும் சங்கு பூ டீ மிக வல்லமைபடைத்தது!! தினமும் காலையில் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு, புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதேபோல இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை 'புளூ டீ ' (Blue Tea) ஆகும். அதன் பெயருக்கான காரணம், நீல நிற சங்குப் பூவின் (Blue Pea Flower) மூலம் தயாரிக்கப்படுவதாகும். புளூ டீ -யின் மருத்துவ பயன்கள் :- Blue Tea Benefits :- ஒவ்வொரு பூவுக்கும் குறிப்பிட்ட மருத்துவக் குணம் இருக்கிறது. அதன் அடிப்படையில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நீல நிற சங்குப் பூ (Sangu Poo) கொண்டு தயாரிக்கப் படும் 'புளூ டீ' உடல் நலனுக்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது. அதில் 'ஆன்டி கிளைகோஜன்' இருப்பதால் வயது முதிர்வை தடுத்து, இளமையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது Blue Pea Flower. உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுவதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளூ டீயில்' (Blue Tea) இருக்கும் 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். அத்துடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ள வர்களுக்கு 'புரூ டீ ' (Butterfly Tea) பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு. வேலைப்பளுவின் காரணமாக உரிய நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்பட்டு விடலாம். அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக 'புளூ டீ' (Blue Butterfly Pea Tea) உள்ளது. மேலும், Blue Pea Flower அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது. குறிப்பாக, 'புளூ டீ' (Pea Tea) அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தைகட்டுபடுத்துகின்றது அதை தவிர்க்க பெரிதாக உதவுகின்றது! 'புளூ டீ ' தயாரிப்பது எப்படி :- How to Make Blue Tea :- கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப் பூக்களை (Butterfly Pea) போட்டு, 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சைச் சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம். முக்கிய குறிப்பு :- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தரும் மருத்துவ ஆலோசனையின்றி 'புளு டீ' (Butterfly Tea) அருந்தக்கூடாது. முஹமது பஷீர் k.

Wednesday, May 18, 2022

Antisocial personality disorder "சமூகவிரோத ஆளுமைக் கோளாறு"

“Antisocial personality disorder” சமூகவிரோத ஆளுமைக் கோளாறு இது ஒரு மனநல பிரச்னை இதற்கான அறிகுறிகள். சமூகவிரோத ஆளுமைக் கோளாறு (Anti social personality disorder) என்பதை சில நேரங்களில் தனி மனிதனால் ஏற்ப்படும் சமூக பிரச்னை என்றும் அழைக்கலாம். இது ஒரு மன நலக்கோளாறு.இதற்க்கு உற்பட்ட ஒரு நபர் தொடர்ந்து சரியாக அல்லது தவறாக கருதாமல் மற்றவர்களின் உணர்வு மற்றும் உரிமைகளைப் புறக்கணிக்கும் மனநிலை கொண்டவராக இருப்பர். Anti social personality disorder இருப்பவர்கள் மற்றவர்களை கடுமையாக அல்லது மிகவும் அலட்சியமாக விரோதிபோல் நடத்துவார்கள். ஆனால் தங்கள் நடத்தைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இருக்காது. தங்களது செயல்களின் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருப்பதால் Anti social personality disorder பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் கட்டுபாடுகளை புரம்தள்ளியும் சட்டங்களை மீறி குற்றவாளிகளாக மாற துடங்கி விடுகிறார்கள் ! இவர்களுக்கு தங்களது உளவியலில் சீரமைப்பு இல்லாததன் காரணத்தினால் அவர்கள் அதிகமாக தனியாக இருப்பதை விரும்புவார்கள், தங்களை யாரும் விரும்புவதில்லை, நான் யாருக்கும் வேண்டாதவர், நான் ஏன் வாழவேண்டும், இந்த புவியில் நான் ஒரு பாழ் பொருள், என்று அவர்களது உள்மனதுக்குள் ஒருவித புலம்பல் இருந்துகொண்டே இருப்பதன் காரணத்தினால் அவர்களுக்கு பிடித்த மிக குறைவான விருப்பங்களை மட்டும் கூட்டாக வைத்துகொள்வார்கள். இத்தகையவர்களுக்கு அவர்களது செயல்களில் வேக குறைவு இருப்பதை காணலாம். அதை பற்றி யாராவது பரிந்துரைத்தால் அவர்கள் மீது பழி கோபம் என்று உருவாகிவிடுகின்றன. இயலாமை அவர்களை பிடித்துகொண்ட படியால் எப்போதும் சோம்பலை கொண்ட நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் பொய் சொல்லாமல் இருக்க முடியாது, குறைந்த அளவிலாவது வன்முறை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள், மற்றும் மனக்கிளர்ச்சியுடன் நடந்து கொள்வதையும் காணலாம். இந்த குணாதிசயங்கள் காரணமாக, இவ்வகை கோளாறு உள்ளவர்கள் பொதுவாக குடும்பம், வேலை அல்லது தங்களது துறைசார்ந்த, தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலும் இருப்பதை காணமுடிகிறது. இதொருவகையானஉளப்பிணி என்பதால்; தங்களை சார்ந்த நிலைகளில் சரி, தவறு என்று கணிக்க முடியாத வகையிலும், தங்களை சார்ந்த மற்றவர்களை வம்பு இழுத்தல், தொடர்ந்து பொய் அல்லது வஞ்சகம் செய்தல் சாதாரணமாகவே கருதுவார்கள்.. கடுமையான, இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பிறருக்கு அவமரியாதை உண்டாக்குதல் தங்களது தனிப்பட்ட லாபத்திற்காக அல்லது தனிப்பட்ட இன்பத்திற்காக மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதுபோன்று இருப்பது, அல்லது அதை அடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவது. இந்த பிணியின் காரணமாக இத்தகயவர்களிடம் மேலும் ஆணவம், தற்பெருமை, தாழ்வுணர்வு மற்றும் கருத்து ஆதிக்கம் செலுத்துதல், தன்னகத்தில் மறைக்கப்பட்ட குற்ற நடத்தை உட்பட சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்ளுதல் போன்றவை சாதரணாம காணுவார்கள். மட்டுமல்லாமல், மிரட்டல் தங்களுக்கு தோன்றும் வகையிலான நேர்மையின்மை மூலம் மற்றவர்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் சீண்டுதல் முன்கூட்டியே திட்டமிட்டு மற்றவர்களை தோற்கடித்தல், நட்போடுகூடிய உள்மரைக்கபட்டிருக்கும் விரோதம், குறிப்பிடத்தக்க எரிச்சல், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு அல்லது வன்முறை, மற்றவர்களிடம் பட்சபாதம் இல்லாதது போன்று நடந்துகொள்வது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில் வருத்தம் இல்லாதது, சுய அல்லது பிறரின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் தேவையற்ற ஆபத்து அல்லது ஆபத்தான நடத்தை, மோசமான அல்லது தவறான உறவுகள், நடத்தையின் எதிர்மறையான விளைவுகளை கருத்தில் கொள்ளாமை, தொடர்ச்சியாக பொறுப்பற்றவராக இருப்பது மற்றும் வேலை அல்லது நிதிக் கடமைகளை நிறைவேற்றத் தவறுவது...! அதே போல் மற்றவர்கள் தங்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் இதில் அடங்கும். இது குணங்கள் குழந்தை பருவம் முத்தற்க்கும், பரம்பரை போக்கு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வடிவமைக்கப்படுகின்றன. சமூக விரோத ஆளுமைக் கோளாறுக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக இன்றளவும் துல்லியமாக கண்டறியப்படவில்லை. ஆனால் சமூக விரோத ஆளுமைக் கோளாறு உருவாக மரபணு மாற்றங்களும் ஒரு காரணம். மேலும் வாழ்க்கை சூழ்நிலைகள் அதன் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. மூளை வளர்ச்சியின்போது மூளை செயல்பாட்டு மாற்றங்களால்கூட இவ்வகை பாதிப்புகள் ஏற்படலாம். சமூக விரோத ஆளுமைக் கோளாறு பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் 15 வயதிற்கு முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும். இதற்க்கான அறிகுறிகள் தீவிரமாகும்போது, நடத்தை சிக்கல்கள் உருவாகும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது அதீத ஆக்கிரமிப்புகளை செலுத்துதல், சொத்துக்களை அழிவதில் சங்கடங்கள் இல்லாதிருத்தல், வஞ்சகம், திருட்டு, நடைமுறை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை வைத்து புரிந்துகொள்ள முடியும். இத்தகைய குணங்கள் இளம் வயதிலேயே காண படுகின்றபோது அதற்குரிய மனநல நிபுணரை அணுகுவது நல்லது. K முஹமது பஷீர். 9442240339

Friday, September 24, 2021

முஸ்லீம் மற்றும் யூத மக்கள் ஒன்றினையும் காட்சிகள் உருவாக துடங்கி உள்ளன.

சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது? 13 ஜனவரி 2019 உலக அரங்கில் நம்பிக்கை சார்ந்த ஒருசில விஷயங்களில் முஸ்லீம் மற்றும் யூத மக்கள் ஒன்றினையும் காட்சிகள் உருவாக துடங்கி உள்ளன. தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் யூத இஸ்லாமிய மக்கள் அதற்க்கான போராட்டங்களில் இறங்கியுமுள்ளனர். ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது. விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் திட்டம் என்ற பெயரில் இது யூதர்களுக்கு விரோதமானது, இஸ்லாமியர்களுக்கு விரோதமானது என்று அவர்கள் கூறுகின்றனர். ஜெர்மனியில் நாஜி ஆட்சிக் காலத்தில் விலங்குகளை உணர்வற்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் வெட்டக் கூடாது என்று தடை விதித்து 1933ல் இதேபோன்ற விவாதத்தை உருவாக்கினார் அடால்ஃப் ஹிட்லர். விலங்குகள் உரிமையும் மத சுதந்திரமும் விலங்குகளை மாமிசத்துக்காக கொல்வதற்கு முன்னதாக அவற்றை உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய சட்டம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் இறக்கும்போது அவை துயரப்படாமல் அல்லது வலியை உணராமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. விலங்குகளை கொல்வதற்கு முன்னால், அவற்றை அசைவற்ற நிலைக்கு அல்லது சுயநினைவற்ற நிலைக்கு கொண்டு செல்லும் நடைமுறைதான் , உணர்வற்ற நிலை எனப்படுகிறது. ஆனால் மத வழக்கப்படி கொல்வதற்கு, ஒரே ஒரே முறை தொண்டையில் துல்லியமாக வெட்டிக் கொலை செய்வதைக் கட்டாயமாக்கும் நடைமுறைக்கு அந்த நாடுகள் விலக்கு அளிக்கலாம். விலங்குகள் இறக்கும்போது தேவையில்லாமல் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுடை மத வழக்கத்தின்படி செய்வது வலி ஏற்படுத்தாத நடைமுறை என்று மதத் தலைவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மரணம் ஏற்படுகிறது என்றும் விலங்குகள் துயரப்படுவதைத் தடுக்கும் வகையில் பல நூற்றாண்டுகளாக இந்த உத்தி கையாளப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஹலால் மற்றும் யூத மத உணவு சட்டமுறையான சாப்பாட்டிற்காக விலங்குகளை கொல்லுவதற்கு கழுத்தில் சரியாக வெட்டி கொல்லப்பட வேண்டும். இந்த இரு தரப்பு வாதங்களுக்கு இடையில் சமன்பாட்டை ஏற்படுத்தும் வகையில், நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், மத சம்பிரதாய அடிப்படையிலான இறைச்சிக்கூடங்களுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன. ஆஸ்திரியா, கிரீஸ் போன்ற நாடுகள், விலங்குகள் வெட்டப்பட்டதும் உணர்வற்ற நிலைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. பெல்ஜியத்தின் மூன்று பகுதிகளில் - பிளாண்டர்ஸ் மற்றும் வலோனியா - என்ற இரண்டு பகுதிகள், டென்மார்க், ஸ்வீடன், ஸ்லோவேனியா, நார்வே, ஐஸ்லாந்து நாடுகளுடன் இணைந்து, வெட்டுவதற்கு முன்னதாக உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த விலக்கு அளிக்காமல் உள்ளன. உணவுக்காக விலங்குகளைக் கொல்வது மட்டும் மத சம்பிரதாய அடிப்படையில் ஐரோப்பாவின் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஒன்று சேர்க்கவில்லை. வேறு சில வட்டங்களிலும் இது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஐஸ்லாந்திலும், ஜெர்மனியிலும் சுன்னத் சடங்கிற்கு எதிரான சட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. சுன்னத் செய்வதும் குழந்தைகள் உரிமையும் கடந்த ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் சுன்னத் செய்வதற்குத் தடை செய்யும் மசோதா முன்மொழியப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் கைவிடப்பட்டது. யூதர்களும், இஸ்லாமியர்களும் சுன்னத் செய்து கொள்கிறார்கள். நான்கு வயது இஸ்லாமிய சிறுவனின் உடலில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவது, அவனுடைய மத நம்பிக்கைகளை முடிவு செய்யும் குழந்தைகள் உரிமையைப் பாதிக்கும் செயல் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து 2012ல் ஜெர்மனியில் சிறிது காலம் சுன்னத் தடை செய்யப்பட்டிருந்தது. "மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத அளவுக்கு உடல் அமைப்பில் கடுமையான மாற்றம் செய்வதை பெற்றோருடைய உரிமைகளோ அல்லது மத சுதந்திரமோ நியாயப்படுத்த முடியாது," என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அந்தத் தீர்ப்பு ஆறு மாதங்களில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் தங்களுடைய நம்பிக்கைகளின்படியான செயல்பாட்டுக்குத் தடை விதிப்பதாக இருந்திருக்கும் என்று இஸ்லாமியர்களும், யூதர்களும் வாதங்களை முன்வைத்தனர். அரசியல் செயல் திட்டம்' வலதுசாரி தேசியவாத கட்சிகள் இதுபோன்ற முயற்சிகளைப் பொதுவாக ஆதரிக்கின்றன என்ற உண்மை, இந்த சர்ச்சைகளுக்கு உள்ள அரசியல் கண்ணோட்டத்தைச் சேர்க்கிறது. விலங்குகள் நல உரிமை மற்றும் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு, குடியேற்றத்துக்கு எதிரான நாட்டங்களுக்கு உதவும் வகையில் அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெற முடியும். பெல்ஜியம் நாட்டில், பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் தேசியவாத சார்புடைய விலங்குகள் நலத் துறை அமைச்சர் பென் வெயிட்ஸ்-ன் முயற்சியால் இந்தத் தடை விதிக்கப்பட்டது. 2017-ல் இந்த மசோதா பிராந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது,``பெருமைக்குரிய விலங்குகள் நல அமைச்சர், ஃபிளெமிஷ் (டச்சு மொழியின் ஃபிளெமிஷ் வட்டார வழக்கைப் பேசுபவர்) ஆக இருப்பதில் பெருமை'' என்று வெயிட்ஸ் ட்விட்டரில் பதிவு செய்தார். பெல்ஜியத்தில் 2014-ல் நடந்த நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவர் ஒருவரின் 90வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சடங்கு முறையோடு கால்நடைகளை கொல்வதும், சுன்னத் மேற்கொள்வதும் மத சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக மத தலைவர்கள் கூறுகின்றனர். ஆண்ட்வெர்ப் பகுதியைச் சேர்ந்த ரப்பி யாக்கோவ் டேவிட் ஸ்ச்மஹல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ``ஜெர்மனியில் இந்தச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட, இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய அதே சூழ்நிலைகளை இது கொண்டு வந்திருக்கிறது'' என்று கூறினார்: களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா? விலங்குகளைப் பாதுகாப்பதைவிட, சில மதக் குழுக்களுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் மறைமுகமான முயற்சிதான் இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை என்று இஸ்லாமிய அமைப்புகளின் வழக்கறிஞர் ஜூஸ் ரோயட்ஸ், டைம்ஸ் இதழுக்குக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், பெல்ஜிய விலங்குகள் உரிமைக் குழுவான Global Action in the Interest of Animals அமைப்பு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்விட்டரில் மறுத்துள்ளது. கொல்லுவதற்கு சட்டம் தேவைப்படுவது மத சுதந்திரத்தை தடுக்கவில்லை என்று விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்யும் வகையில் பெல்ஜியத்தின் சட்டம் உள்ளது என்பதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது. தொண்டையை அறுக்கும் போது - அந்த விலங்கு கொல்லப்படாமல் - மயக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் - அது ஏற்புடையது என்று கருதப்படும் மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்லும் நிகழ்வுகள் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விளக்கத்தை இஸ்லாமிய மற்றும் யூத மதத் தலைவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் மாண்புகளுடன் உரசலைக் கொண்ட மத சம்பிரதாயங்களில் விரிவான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் வெற்றிபெற்று வரும் ஆர்வலர்களுக்கு இடையில், இந்த விவாதங்கள் சற்று குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

Sunday, October 16, 2016

முஃமினான(நம்பிக்கயாளர்களாகிய) மனிதர்களின் முழுவெற்றிக்கு குர்ஆன் கூறும் நல்லுபதேசங்கள்!.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
முஃமினான(நம்பிக்கயாளனாகிய) மனிதர்களின் முழுவெற்றிக்கு குர்ஆன் கூறும் நல்லுபதேசங்கள்!.
"அல்லாஹு மன்னிக்காத ஒரே ஒரு பெரும் பாவம் "
"அல்லாஹு தனக்கு இணைவைக்கும்(ஷிர்க்شرك ) செயலை மட்டும் மன்னிக்கவே மாட்டான் அதை தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிக்கின்றான்!"
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

"தன்னுடைய அடிமையுடன் அல்லாஹு மிக அருகாமையிலேயே உள்ளான்'
அல்லாஹு வை நாம் அழைக்கும் வண்ணம் நம்முடய மிக அருகாமையிலேயே எப்பொழுதும் உள்ளான்; இந்த உலகிலேயே  அல்லாஹுவை விட நம்மை அடுத்து நிற்ப்பவர் மற்றாருமே இல்லை!
وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏ 
2:186. (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.
வீடுகளில் நுழையும்போது ஸலாம் கூறுதல்
எந்த ஒரு விசுவாசியின் வீட்டில் நுழையும் போதும் சலாம் கூற வேண்டும். அந்த சலாம் என்பது நம்முடைய உள்ளத்திலிருந்து வரவேண்டும் நாம் அவர்களுக்காக கூறும் சலாம் என்பது அந்த குடும்பத்திற்கு அல்லாஹுவிடம் இருந்து நம்முடைய பிரார்த்தனையின் மூலமாக கிடைக்குமாறு மனமுவந்து சொல்லவேண்டும். ஏதோ பேருக்காக, வழக்கத்திற்காக அஸ்ஸலாமு அலை க்கும் என்பது குபுறையே,நிராகரிப்பை  அதிக படுத்தும் சலாம் கூறும் நம் உள்ளம் அமைதி நிறைந்து  துளும்பும் உள்ளமாக எப்பொழுதும் இருத்தல் வேண்டும்!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 
PAGE 2

24:27. நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!

எந்நேரமும் அல்லாஹுவை நினைவு கூறுதல்!
ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹுவை மனிதர்களாகிய நாம் நினைவு கூறிகொண்டிருந்தால் அல்லாஹ் நம்மையும் நினைத்து கொண்டு நமக்கு அருள் புரிந்துகொண்டே இருப்பான் என்று அல்லாஹுவின் அன்பான உபதேசம்!.
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ‏ 
2:152. நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

செய்யாத செயல்களை செய்ததாக கூறுவது பெரும் பாவமாகும் என்று அல்லாஹு நம்மை உபதேசிக்கின்றான்!
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏ 
61:2. நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்?
61:3 كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏ 
61:3. நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது.





PAGE 3
وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ 
2:188. (அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
சிறந்ததையே தானம் செய்ய வேண்டும்
நமக்கு விருப்பமானதை தானம் செய்ய கட்டளை!:
நமக்கு மிக பிரியமான பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்யாதவரயில் நன்மை என்பது நமக்கு கிடைக்காத ஒன்றாக ஆகிபோயவிடுகிறது!
وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏ لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ
3:92. உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான்.

உறுதியான வெற்றிக்கு
நாம் முயற்சிக்கும் அனைத்து கார்யங்களிலும் முழு வெற்றி அடைய வேண்டுமாநேயானால் பொருமயயைகொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹுவுடன் உதவி தேடிக்கொண்டே இருக்கவேண்டும்!
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
2:153. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
"ஒன்றுக்கு அதிகமான மனைவியர்"
ஒன்றுக்கு அதிகமான மனைவியரிடம் எவ்வகையிலும் நீதியுடன் நடந்துகொள்ள முடியாது என்று.



PAGE 4

எவ்வளவுதான் மனிதன் நீதமாக நடந்துகொண்டாலும் ஒன்றுக்கு அதிகமான மனைவிகளிடத்தில் அவனால் துல்லிய நீதி செய்ய
முடியாது அவன் ஒருவளுடைய சூழ்ச்சியில் விழுந்து மற்றவளை வழியில் விடக்கூடிய சூழல் வந்துவிடுகிறது. இதற்க்கு பகரமாக, பகையாக மற்றவள் இவனை சூழ்ச்சியில் ஆழ்த்தியும் விடுகிறாள்! அதனால் இருமனம் என்பது ஒரு ஆணுக்கு பெரும் துயரத்தை நிலைக்க செய்கின்றது என்று அல்லாஹ் திட்ட வட்டமாக கூறி விட்டான்!
وَلَنْ تَسْتَطِيْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ‌ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ‌ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‏ 
4:129. (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் (முற்றிலும்) நீதமாக நடக்க வேண்டுமென்று (எவ்வளவு) விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கினவளாக விட்டு விடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்துகொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான்.

மற்றவர்களை உபதேசிப்பதற்கு முன்னே !
எஹூத நசாராக்களை போலவே முஸ்லிம்களாகிய நாம் வேதத்தை உடையவர்கள் என்ற நிலைக்கு அந்த வேதத்தை நாம் நடைமுறை படுத்தாமல், அதன் படி நடக்காமல் மற்றவர்களை அதை நாடி நடக்குமாறு ஏவுவது மார்க்கத்திற்கு முரணான செயல் என்று இங்கு அல்லாஹு திட்ட வட்டமாக கூறுகிறான்!
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

PAGE 5
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? 2:44.
"பரிசுத்தமான நல்ல உணவையே உன்ன வேண்டும் "
நம்பிக்கை கொண்ட மக்களின் நலமான வாழ்விற்கு பரிசுத்தமான உணவுகளைமட்டுமே உண்ணவேண்டும்!
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏ 
2:172. நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள்.

"இத்தகையவர்களுக்கு மட்டுமே உலகம் அலங்காரமாக தோன்றும்"
இவ்வுலக வாழ்க்கை மிக அலங்காரகமாக இருப்பது இறை நிராகரிப்பாளர்களுக்கு மட்டுமே!
ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏  ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِزُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا
2:212. நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.




PAGE 6
அனாதைகளின் சொத்து மற்றும் உரிமைகளில் மிக்க கவனம் வேண்டும் அதில் துளியளவு வரம்பு மீறினாலும் இம்மையும் மறுமையும் நஷ்ட்டமடையும்!
  وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ‌ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ‌ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا‌ ؕ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏ 
4:6அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும்வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.

நம்மை சுற்றியுள்ள மனிதர்களை நன்மையின்பால் அழைத்தும் தீமையிலிருந்து விலக்கவும் செய்யாதவரை நாம் வெற்றியாளர்கள் ஆவதில்லை!
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 
3:104. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.






PAGE 7
அனைத்து தொழுகையையும் குறித்த நேரத்திலேயே தொழவேண்டும், அதும் மிக உள்ளச்சதோடும் தொழ வேண்டும்!
حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏ 
2:238. (நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.
‌‌
"சில நேரங்களில் நடந்துகொண்டும் வாகனத்தில் இருந்துகொண்டும் தொழுதல் தொழுகை ஒரு முஸ்லிமிற்கு எந்த நிலையிலும் மாற்றிவைக்க முடியாத ஓன்று என்று அல்லாஹு இங்கு உணர்த்து கின்றான்"
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْکُرُوا اللّٰهَ کَمَا عَلَّمَکُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ‏ 
2:239. ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.
ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுதால் வழி கேட்டை தான் உருவாக்கும்!
 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 
24:21. நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.



PAGE 8

மற்றவர்களுக்காக சிலவழித்தல் முஸ்லிமிற்கு கட்டாயமான ஓன்று !
‏ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ  ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ
2:254. நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.
தான தர்மம்;மற்றவருக்கு பொருளாதார உதவி செய்தல் நம்முடய மனதிற்கு கடும் பாரமாகும் பொருட்டு சிறந்த ஒரு உபதேசமே சிறந்தது.
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَاۤ اَذًى‌ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَلِيْمٌ‏ 
2:263. (தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அன்றி, அல்லாஹ் தேவையற்றவனாகவும் பொறுமையாளனாகவும் இருக்கின்றான்.
பெருமைக்காக சிலவழித்தல்
‏ மற்றவர்களை காண்பிப்பதற்காக சிலவழிப்பதும், கொடுத்ததை சொல்லி காண்பிப்பதும் செய்த தான, தர்மங்களின் பலனை முழுமையாக இழக்க செய்கிறது!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدً‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏ 
2:264. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இத்தகையவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது
மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும்



PAGE 9
கூட்டத்திற்கு (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

"சத்ய விசுவாசி கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்க படுகிறான்"
பொருளாதார இழப்புகள் மூலம், அவனுக்கு விருப்பமானவர்களின் உயிர் இழப்புகள் மூலம் அவனுடைய எதிரிகளால் ஏற்ப்படும் கொடிய துயரங்கள் மூலம் ஒருவிஷ்வாசி கடுமயாக சோதிக்க படுவான் அந்த நேரத்தில் மனம் தளராதும் நேர்மையுடனும் பொறுமையாகவும் அந்த நரங்களில் ஏற்ப்படும் சூழல்களை பொறுமையாக கையாளும் நம்பிக்கயாலர்களே வெற்றியாளர்கள் என்று!
لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ 
3:186. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.

மனிதன் எப்பொழுதுமே மலக்குகளால், வானவர்களால் சூழ பட்டநிலயிலேயே உள்ளான்!
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏ 
13:11. (மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு யாரும் இல்லை.



10
"அழகிய நம்பிக்கையாளன்,வெற்றியாளன் அவர்கள் இத்தகையவர்களே!"
ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளன் என்றால் அவன் நிற்கும் நிலையிலும், உக்கார்ந்துகொண்டு இருக்கும் நிலையிலும்,   கிடந்த
கிடப்பிலும் வாழ்க்கையின் அனைத்து நேரங்களிலும், சதா நேரமும் அல்லாஹுவை நினைவு கூர்ந்துகொண்டே இருப்பான் இந்த உலகத்தின் படைப்புகளான அத்தாட்சிகளை கண்டு அதில் வியப்புண்டு! வானங்களில் உள்ள நட்ஷத்திரங்கள் கோள்கள் பூமியின் சுழற்சி மற்றும் நிகழ்வுகள் பற்றி யோசித்து,ஆராய்ச்சியில் ஈடு பட்டவனுமாகவுமே அவனுட வாழ்நாளை கழிப்பான், மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் அவனுடைய இறைவனிடம் நிரந்தரமான பிரார்த்தனையிலும் ஈடு பட்டுக்கொண்டே இருப்பான்!.
الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ 
3:191. இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ
இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!
"மனித மனதிற்கு நித்ய சாந்தி அல்லாஹுவின் நாமத்தை நினைவு கூருவதியே கிடைக்கிறது!."
அல்லாஹுவின் நல்லடியார்கள் யார் என்றால் அல்லாஹுவின் நாம கேட்ட மாத்திரத்தில் அவர்களுடைய மனம் நித்ய ஷாந்தி அமைதி கொன்கின்றன!
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ‏ 
13:28. மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.


11
சிறந்த தான, தர்மங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அதி மகத்தான நன்மையும், கூலியும் உண்டு!
وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ 
2:265. எவர்கள் தங்களுடைய பொருளை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்களுடைய உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகின்றது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அன்றி, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

"நமக்கு விருப்பமான பொருளை தர்மம் செய்தல்}
"சிறந்ததை கொண்டு மட்டும் தர்மம் செய்ய வேண்டும். நமக்கு தேவையற்ற ஒரு பொருளை கொண்டு மற்றவருக்கு தர்மம் செய்ய கூடாது. நமக்கு ஒரு கெட்ட பொருள் கிடைக்க நேரிடுமானால் அது கிடைத்தபிறகு நம்முடைய மனம் எவ்வண்ணம் வேதனை பெறுமோ அதைப்போலத்தான் நாம் நமக்கு தேவையற்ற பொருளை மற்றவருக்கு தானம் செய்யும்போது அவர்களுக்கும் ஏற்படுகிறது. நாம் விரும்புவதை கொண்டுமட்டுமே தானம் செய்ய வேண்டும்!"
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏ 
2:267. நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.
12
"ஏழைகளுக்கு கொடுக்காமல் சேர்த்த சேமிப்புக்கு தண்டனை!"
அல்லாஹு நமக்கு அள்ளிவழங்கிய பொருளாதாரம், பொருட்களை சிலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்வது அதை உரிய மக்களுக்கு கொடுக்காமல் நம்மிடமே வைத்துகொண்ட நிலையில் மரிக்க, இறக்க நேரிடுமேயானால் மறுமையில் நாம் நமது மக்களுக்காக சேமித்து வைத்த அந்த பொருட்கள் மூலமாக நமக்கு தண்டனை கிடைக்க அடைய நேரிடும். நமது சேமிப்பான அந்த தங்கங்களும், வெள்ளிகளும், நாணயங்களும் நரக தீயாக மாற்றப்பட்டு அந்த தீயே உணவாக பருகவும் குடிப்பதர்க்குமாக தரப்படும்!

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
3:180. எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

நாம் நம்முடைய பொருள்,மற்றும் பொருளாதாரத்தை கொண்டு நம்மை சார்ந்த மற்றவர்களுக்கு தர்மம் செய்ய நாடும்போது ஷைத்தான் பின்னல் வரவிருக்கும் வருமயை எடுத்துக்காட்டி கஞ்ச தனத்தை உருவாக்கி கொடுக்க விடாமல் தடுப்பான், அனால் அல்லாஹுவோ! கொடுத்ததைவிட கொடுத்தவனுக்கு பலமடங்கு அள்ளி வழங்கு கிரான்!. 
اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ
2:268. (நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

13
குர் ஆனை உலகமக்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதாமாகத்தான் இறக்கி அருளியுள்ளான்! அல்லாஹு
لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 
24:46. (மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல) வர்களையே (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்.


ஒரு உண்மையான விசுவாசியின் நிலை!
ஒரு நம்பிக்கையாளன் என்றால் பொறுமை வேண்டும்,அல்ல அளவுகடந்த பொருமயாளனாகவும் இருத்தல்வேண்டும். அதிக சகிப்புதன்மயுள்ளவனாகவும் இருத்தல்வேண்டும். அனைத்து வகையான பயம்அற்ற, அச்சமற்ற நிலையில் உள்ளவனாக இருத்தல் வேண்டும்! அவனுடைய வாழ்வின் அனைத்துநேரங்களிலும் விழிப்புடன் செயல் படுபவனாகவும்,தன்னம்பிக்கையுள்ளவனாகவும், தன்எதிரிகளை எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எந்த சந்தற்பங்களிலும், நேரிட தயாரான நிலையிலும் இருத்தல் வேண்டும்!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 
3:200. நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.

ஒரு நம்பிக்கையாளன் அல்லாஹுவின் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுவான் அதில் அவன் தலாந்து விடுதல் கூடாது !
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏ 
2:214. (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி
PAGE 14

எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.

அனைத்து தரப்பு மக்களிடமும் கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் அனைவருக்கும் உபகாரமும் செய்ய வேண்டும்,வீண் பெருமையும் கூடாது என்று அல்லாஹு அறிவுறுத்துகிறான்!.
4:36   وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ 
4:36மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
.

வீண் தர்க்கங்கள் அறவே கூடாது என்று வீண் தர்க்கங்கள் ஷைத்தானின் தூண்டுதலே!
6:121   وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏ 
6:121எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.



PAGE 15
அல்லாஹு தன அடியார்களில் தான் நாடியவர்களுக்கு மட்டுமே (ஹிக்ம நுண்ணறிவை) ஞானத்தைவழங்குகிறான்!
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌ ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏ 
2:269. (அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே "ஹிக்மா" (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, இறைஞானத்தைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள்

வீண் விரயத்தை அல்லாஹு ஒருக்காலும் விரும்புவதில்லை!
6:141   وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏ 
6:141பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

உலக மனித சமுதாயங்கள் அனைத்திலும் உயர்ந்த சமுதாயமக்கள் முஸ்லிம்களாகிய நாம் மட்டுமே! அது ஏன் என்றால்? அனைத்துலக மக்களிடமுமாக நன்மையை ஏவி தீமையை தடுத்து பாவமான காரியங்களிருந்து விலகியும் மற்றவர்களை விலக்கியும், உலக நன்மயைக்காக, அமைதிக்காக வழிவகுக்கும் உத்தம சமுதாயம் என்ற
நிலைக்கு முஸ்லிம் சமுதாயமே உத்தம உன்னத சமுதாயம்!.
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏ 
3:110. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள்
PAGE 16

(மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
ஒரு நம்பிக்கையாளன் மற்றொரு சத்ய விசுவாசியை அல்லாது நெருங்கிய உறவினராக்கி கொள்ள கூடாது!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
3:118. நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)
3:119
நாம் நம்மை அடுத்த நம்பிக்கையற்ற அனைவரையும் நம்பினாலும் ,நேசித்தாலும் நம்பிக்கயாலர்கல்லாத மக்கள் நம்பிக்கயாளர்களுக்கு என்றும் நன்மையை நாடுவதில்லை என்று!
3:119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும்
நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."


PAGE 17
நம்பிக்கையாளன் இறை நம்பிக்கையாளன் அல்லாத உறவில் நட்புறவு வைக்கும் போது அவனுக்கு ஏற்ப்படும் தீங்குகள்.!
நம்பிக்கயாளர்களுக்கு மிகவிருப்பமான, மிகநெருங்கிய உறவினர்களாக, மிகஅருகாமையில் உள்ள நம்பிக்கையற்ற நண்பர்கள், உற்றார், உறவினர்கள் போன்றவர்கள் அவர்களை சார்ந்த நம்பிக்கயாளர்களுக்கு ஏற்படும் தீமையில் மிகுந்த சந்தோஷம் அடைபவராகவே உள்ளனர்!

3:120. உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

நம்முடைய தான தர்ம செயல்கள் மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக இருப்பதற்காக அதை வெளிப்படையாக செய்வதும், அல்லது மறைத்து கொடுத்தாலும் மிகவும் நல்லதே! ஆக ஏழைகளுக்கு எந்த வகையிலாவது தான தர்மங்கள் செய்வதின் மூலம்  நம்முடைய பாவங்கள் மாய்ந்து போவதற்கு அது காரனமாகிறது!
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ؕ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 
2:271. (நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான்.
உண்ணலாம் பருகலாம் ஆனால் வீண்விரயம் அறவே கூடாது!
7:31   يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏ 
7:31ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம்செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
PAGE 18
"அனாதைகளின் உணவை அநியாயமாக உட்கொண்டால்"
அனாதைகளின் பொருளாதாரத்தை அன்யாயமாக உண்ணுவது பெரும் பாவமாகும்! அதிலிருந்து ஒரு அனுவளவு கூட நம்முடைய வயிற்ரை சென்றடைந்தால் நிரந்தர நரக நெருப்புக்கு மட்டுமாக நாம் ஆகி விடுகிறோம் அதிலிருந்து நாம் என்றுமே மீளமாட்டோம்.!
4:10 اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏ 
4:10. எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.

செய்த பாவங்களை நினைத்து மனமுவந்து மன்னிப்பு கோரினால் அல்லாஹு அதை  மன்னிகின்றான்!
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏ 
4:17. எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நாம் உண்ணும் உணவு நாம் நம்முடய குழந்தைகளுக்கு மனைவி மற்றும் உற்றாருக்கு கொடுக்கும் உணவுகள் தூயமாக இருத்தல் வேண்டும். வழி தவறி உருவாக்கப்படும் பொருளாதார வழிகளான கொள்ளை, நிர்பந்தத்திற்கு உள்ளாகி பிடித்து பரித்து எடுத்தல் இழிவான வழியில் கிடைக்கும் வரதட்சினை போன்ற போருளாதரங்களை உண்ணுவது மிக ஈனமான செயலாகும் என்று அல்லாஹு நம்பிகை யாளர்களை உபதேசிகின்றான் .

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ‌ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏ 
4:29. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். அன்றி (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான்.




19
பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்ந்தால் சிருபாவங்களை அல்லாஹு மன்னிக்கின்றான்!.
اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏ 
4:31. உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.

"ஆணும் பெண்ணும் சம்பாதிக்கலாம்!"
மனிதர்களில் ஒரு சிலரை விட மற்றவருக்கு அல்லாஹு அவனது அருளிக்கொண்டு சிறப்பித்துள்ளான் அதைகண்டு மற்றவர்கள் இல்லாதவர்கள் பேராசை வைக்க கூடாது. பெண்களின் சம்பாத்தியம் பெண்களுக்கு ஆண்களின் சம்பாத்தியம் ஆண்களுக்கே உரியது ஆணும் பெண்ணும் உழைத்து உயர அல்லாஹு தடி விதிக்கவில்லை.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ 
4:32. உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண்
ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
ஆண் பெண் படைப்புகளில் அல்லாஹு ஒருவருக்கு ஒருவரை மேன்மையாக்கி வைத்துள்ளான் பொருளாதார பொறுப்பையும், பெண்கள்மீதான நிர்வாக பொறுப்பையும் ஆண்கள் மீதே சுமத்தியுமுள்ளான்!
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏ 
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும்
PAGE 20

கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.

கருமித்தனம், கஞ்சத்தனம் செய்வது அதை செய்ய மற்றவர்களை தூண்டுவதும் பெரும் பாவத்திற்கு உரிய செயலாகும்!
اۨلَّذِيْنَ يَـبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‌ ۚ‏ 
4:37. எவர்கள் (தாங்கள்) கருமித்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

"அல்லாஹுவின் பாதையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து" அவர்களுடைய அன்றாட குடும்ப,சுய தேவைகளுக்காக கூட பணிக்கு செல்லாமல் இருக்கும் சில இறைபணியாளர்கள் நம்பிக்கயாளர்களில் உள்ளனர், இவர்கள்  மற்றவர்களின் வெளிப்பார்வைக்கு செல்வந்தர்களைபோலே காட்சியளிப்பார், அனால் அவர்களுடைய வாழ்க்கையின் மற்ற அடையாளங்களை வைத்து அவர்கள் பெரும் ஏழைகள் என்று ஆராய்ந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். தங்களுடைய தேவைக்காககூட மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்குவார்கள்! இத்தகையவர்களை கண்டறிந்து உதவுவது மற்றவர்களுக்கு அல்லாஹுவின் திருப்தியை அடைய வழிவகுக்கு கின்றன!
‏لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًاؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
2:273. (நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட
PAGE 21
சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.

இரவு பகல் பாராமல் வெளிப்படையாகவும் ரஹசியமாகவும் பிறருக்கு உதவுவதும் தனது பொருளாதாரத்திலிருந்து ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்குவது  அல்லாஹுவின் மிகுந்த விருப்பத்திற்கு ஆளாகுவதும் அதற்க்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் கூலியும் உண்டு!
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏ 
2:274. (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

மக்களுக்கு நேர் வழிகாட்டுவது மட்டுமே சத்ய விசுவாசியின் பொறுப்பாகும்  நேர் வழி கொடுத்து அதில் நடத்த செய்வது அல்லாஹுவின் மட்டும் கடமையாகும்,மட்டுமல்லாமல் நல்லதிலிருந்து சிலவு செய்யவேண்டும்,பெருமைக்காகவும் செலவு செய்ய கூடாது!
لَيْسَ عَلَيْكَ هُدٰٮهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ‌ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏ 
2:272. (நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்)
PAGE 22
நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுக்கு எந்த செய்தி வந்தாலும் அதை விசாரித்த பிறகே நம்ப வேண்டும் என்று!
24:12   لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ 
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்என்று கூறியிருக்க வேண்டாமா?

முஃமின்கள்என்றும் நடுநிளையிலே செலவு செய்வார்கள் என்று அல்லா கூறுகிறான்
25:67   وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ 
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

வீண் தர்க்கத்தை முன்கூட்டியே அறிந்துகொண்டு தவிர்த்து கொள்ள வேண்டும்!
43:58   وَقَالُـوْٓا ءَاٰلِهَتُنَا خَيْرٌ اَمْ هُوَ‌ؕ مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ‏ 
43:58. மேலும்: எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.




PAGE 23

வட்டி பெரும் பாவமே!

"வட்டி"க்கு வாங்குவதும் கொடுப்பதும் பெரும் பாவமே! எந்தவகை "வட்டி"யாக இருந்தாலும், பணத்தைகொடுத்து பணம் வாங்கும் எந்த வருமானமும் பாவத்தின் வழியாக சம்பாதிக்கும் பொருளாதாரமாகும்.  இந்த வகையை  சார்ந்த அணைத்து வகை பொருளாதாரமும்  அல்லாஹுவிடம் பெரும் பாவமானகுற்றமேயாகும்!  இந்தவகையான பொருளாதாரத்திலிருந்து, அதிலிருந்து நாம் உண்ணுவதும் பருகுவதும் நம்முடைய மனைவி மக்களுக்கு கொடுப்பதும் பெரும் பாவத்தை நாமும் உண்டு நம்மவர்களுக்கும் ஊட்டுவதைபோலாகும். இந்த வகை பொருளாதராம் காரணமாக நமக்கு பெரும் வேதனையும் இழிவும் துயரம் நிரந்த வாழ்க்கை இம்மையிலும் மருமயிலுமாக நமக்கு காத்திருக்கிறது!
اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 
2:275. வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

அல்லாஹு வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான்,அல்லாஹுவின் எதிரிகளான பெரும் பாவிகள் தர்மத்தை அழித்து வட்டியை நிலை நாட்டுகிறார்கள்! எந்தவகையான வட்டி வகீராக்களயும் தொடர்புகொள்ளும் ஒவ்வொருவனும் இறை மறுப்பாளனே(காபிர்கள்மட்டுமே)!
يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏ 

PAGE 24

2:276. அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

உண்மையான நம்பிக்கயாலனாக இருந்தால் மீதமுள்ள அனைத்து வட்டி கார்யங்களில் இருந்து அனைத்து தொடர்புகளையும் அறுத்து கொள்வான் பாவமான வட்டியிலிருந்து தன்னை தர்க்காத்து கொள்வான் பாபத்திலிருந்து மீண்டு பரிசுத்தனாகி கொள்வான்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 
2:278. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.

வட்டியில் நிலைத்திருக்கும் ஒருவனோடு அல்லாஹுவின் மார்க்கத்தில் எதிரியாக கண்டு அவனிடம் போரிட அல்லாஹு இங்கு வலியுறுத்துகிறான். வட்டிஎன்னும் மகா பாதகம் இவ்வுலகில் இல்லாமல்  போவதற்கு இதுவே சிறந்த வழியாக  அல்லாஹு கட்டளை இடுகிறான்!.
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏ 
2:279. இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!

"கடனாளியிடம் கண்ணியம்"
கடன் கொடுத்தவன் கொடுத்தவனிடம் மிக கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் அவனுக்கு திருப்பி தர முடியாத சூழல் இருக்குமேயானால் அச்சூழல் வரும் வரை காத்திருக்கவேண்டும் அதிலும் அவனுக்கு திருப்பி தர

PAGE 25
முடியாது என்றால் அதை அவனுக்கு தானமாக கொடுத்து விடவேண்டும்!.
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
2:280. அன்றி, (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்.

இரு உலகிலும் மனிதனை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கும் கடன்!
கடன் தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே அதை சாட்சிகளுடன் எழுதி வைக்கவேண்டும் அது ஒரு முஸ்லிமிற்கு காட்டாய கடமையாகும்! கடன் விஷயத்தில் இஸ்லாம் பெரியதொரு தத்துவத்தை மனித சமுதாயத்திற்கு புகட்டுகிறது.
மனிதர்களுக்கு உள்ளே நடக்கும் கடன் விஷயத்தில் அல்லாஹு ஒருக்காலும் தலையிடமாட்டான் அது சம்பந்த பட்ட நபர்கள் மட்டுமே தீர்த்து கொள்ளவேண்டும் இது நாம் வாழும் இம்மயாக இருந்தாலும் சரி இனி வரவிருக்கும் மறுமை வாழ்க்கையிலும் சரி.
கடன் பாக்கி வைத்து கொண்டுள்ள மரணம் நமக்கு பெரும் நஷ்ட்டங்களை உண்டாக்குகிறது இரு உலகிலும்!. அதனால் கடன் விஷயத்தில் பெரும் பயம் உள்ளவராக எச்சரிக்கையோடு வாழவேண்டும்.
2:282. நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை
PAGE 26

எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக
அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(ôமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன்.




PAGE 27

மறுமையில் வீண் விரயம் செய்தவருக்கும், உலக சுகங்களுக்காகவேண்டி வாழ்ந்தவருக்கும், பெருமையடித்து கொண்டு வரம்பு மீறி வாழ்ந்தவருக்கும் மிக கடினமான தண்டனைகள்!
46:20   وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ‌ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ‏ 
46:20. அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

முஹ்மின்கள் சீர்திருத்த வாதிகள்!
6:48   وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ 
6:48(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
நன்மை தீமை எதை செய்தாலும் பத்துமடங்கு கிடைக்கும்!

6:160   مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ 
6:160எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
நல்ல நம்பிக்கயாளர்களுக்கே அல்லாஹு வழிகாட்டுகிறான்!
8:29   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏ 
PAGE 28

8:29ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

யாருக்கு நன்மாராயம் கூற சொல்கிறான்!
9:112   اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 
9:112மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள்தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

அல்லாஹு நாடியதே நமக்கான நன்மையும் தீமையும்!
10:107   وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
10:107அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
மனிதனின் மனது எப்பொழுதும தீமையை தூண்டகூடியதாகவே அமைந்துள்ளது!
12:53   وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌۢ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ ؕاِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
12:53அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).



PAGE 29
13:22   وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ‏ 
13:22இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

அல்லாஹுவின் அதிகாரம் படைத்த நம்பிக்கையாளர்கள் இவர்கள்தாம்!
22:41   اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏ 
22:41அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

சத்ய விசுவாசிகள் பொறுமையை மேற்கொள்வார்கள்!
28:54   اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏ 
28:54இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.

எதை மறுமைக்காக மனிதன் கொண்டு செல்கிறானோ அதற்க்கான பலன் மட்டும் மறுமையில்!
28:84   مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
28:84எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.



30
லுக்மான் நபி தன மகனுக்கு பூகட்டியது!.
லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி "என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்" என்று கூறினார்.
தாய்தந்தையர் பற்றி  இறைவனின் கூற்று
31:14 وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏ 
31:14. "தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது.
தாய் தந்தையர் இணை வைக்க கூறினால் அவர்களுக்கு கட்டுபடுதல் கூடாது
31:15 ۙ فَلَا تُطِعْهُمَا‌ وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا‌ وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ
31:15. எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்பட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே
வரவேண்டிய திருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்" (என்று கூறினோம்).
நீதி என்பதும் அநீதி என்பது கடுகுமணி அளவில் இருந்தாலும் அது  அமாவசை இருண்ட  இரவில் கரும்பாறையில் ஒளிந்திருந்தாலும் அல்லாஹு வெளிகொண்டுவருவான் என்ற எச்சரிக்கை!
31:16 يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏ 
31:16. (பின்னும் லுக்மான் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு
31

நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான்.
தமக்கு ஏற்ப்படும் கஷ்ட்டங்களை சஹித்துகொள்ள  மகனை ஏவுகிறார்!
31:17 يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ۚ ‏ 
31:17. என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.
பெருமைகொண்டவனையும் கர்வம் கொண்டவனையும் அல்லாஹு நேசிப்பதில்லை!
31:18 وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ‏ 
31:18. (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
உயர்ந்த சப்தம், பேச்சு கழுதையின் ஓசையை போன்றது என்று!
31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ‏ 
31:19. உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்).

31:17   يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ۚ ‏ 
31:17என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவிதீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
தீமை செய்த ஒருவருக்கு நன்மை செய்யல்
41:34   وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏ 
41:34நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
32
நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை பலன்
45:15   مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏ 
45:15எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
நம்மை சார்ந்த குடும்பங்களை நரகத்தை விட்டும் காத்துக்கொள்ள விடுப்பு!
66:6   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ 
66:6முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
நல்ல முஹ்மினின் பண்பு
  اِنْ تُبْدُوْا خَيْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا‏ 
4:149நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹுவின் உபதேசங்களை மறந்தவர்களுக்கு பெரும் இழிவு என்று
7:165   فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏ 
7:165அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.

அல்லாஹுவை அஞ்சுபவர்க்கு மட்டுமே நேர்மார்க்கம் கிடைக்கும்.
8:29   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏ 

PAGE 33

8:29ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
"இத்தகயவர்களுக்கே நன்மாராயம் கூறுகிறான் அல்லாஹு."
9:112   اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 
9:112மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள்தீமையை விட்டுவிலக்குபவர்கள்.
அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

"நமக்கு நன்மையும் தீமையையும் நாடுவது அல்லாஹு மட்டுமே!"
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
10:107அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏ 
41:34நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏ 
45:15எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.



PAGE 34
தங்களுடைய ரக்ஷகன் அல்லாஹு என்றதன் காரணத்திற்க்காக மட்டும் அனைத்தையும் இழந்த மனிதனை பற்றி.
اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ ؕ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏ 
22:40. இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
நீதியில் நிலைத்திருப்பதும் சத்யத்திற்கு சாட்சியம் அளிப்பவராக இருப்பதும் விசுவாசிகளுக்கு கடமையானதே!
4:135   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏ 
4:135முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏ 
5:8முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்புநீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
PAGE 35

நீதியுள்ள மக்களை மட்டுமே அல்லாஹு நேசிகின்றான்
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَ كّٰلُوْنَ لِلسُّحْتِ‌ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ‌ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْــٴًـــا‌ ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 
5:42அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.

  اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏ 
6:82எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

அல்லாஹுவின் படைப்பில் அழகிய கூட்டத்தார் இவர்கள்.
  وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ‏ 
7:181நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.

அல்லாஹு மனிதனை நீதி செய்யுமாறு ஏவுகிறான்!
  اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 
16:90நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
.

PAGE 36

فَلِذٰلِكَ فَادْعُ‌ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ‌ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ‌ۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ‌‌ۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ‌ؕ لَـنَاۤ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ‌ۚ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا‌ۚ وَاِلَيْهِ الْمَصِيْرُؕ‏ 
42:15எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறதுஎன்றும் கூறுவீராக.

இரு முஹ்மின்கள் சண்டை இட்டுகொண்டால்
  وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 
49:9முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
குர் ஆண் மனதிற்கு அருமருந்து
وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‏   يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ
‌ؕ 10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
PAGE 37

மனிதனுடைய மன அமைதிக்கான, நோய்க்கான அருமருந்தாகும் குர் ஆன் வசங்கள் என்று தெளிவாக குரான் கூறுகிறது!. அனால் நம்முடைய மனம் அமைதியாக இல்லை என்று நமக்கு அனுபவ பெடுமேயானால் அல்லாஹுவுடைய வேதம் நம்மிடம் இல்லை அதாவது அல்லாஹு நம்மிடம் இல்லை என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துன்புறுத்தலுக்கு பதிலாக துன்புறுத்தல்!
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖ‌ۚ وَلَٮِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ‏ 
16:126. (நம்பிக்கையாளர்களே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றே!

தர்க்கம் செய்யலாம் எவ்வண்ணம்!
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏ 
16:125. (நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.
சத்ய விசுவாசிகள் நேர்மையாக மட்டும் பேசவேண்டும்!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ 
33:70. (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
33:71 يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏ 
33:71. அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார்.

PAGE 38

மனிதனின் பூரண வெற்றிக்காக குர்ஆன் பொறுமையை பெரிதும் பேணி கொள்ள சொல்கிறது.

2:45மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
பொறுமையும் தொழுகையும் ஒருநானயத்தின் இருவச்ங்கள் பகுதிகள் இவையில் நம்மிடம் ஓன்று இருந்து மற்றொன்று இல்லாமல் போகுமேயானால் ஈருலகிலும் வெற்றியென்பது இயலாத்தால் ஒன்றாகி விடுகிறது!.
ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ 2:153   يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ
2:153நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:155   وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால்பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
.
2:156  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏ الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ
2:156. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள்.
2:177   لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ
2:177புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின்

PAGE 39

காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும்பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
2:225   لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏ 
2:225(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏ 2:249   فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍ‌ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْ‌ۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖ‌‌ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ
2:249பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லைஎன்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை

PAGE 40
அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்என்று கூறினார்கள்.

  وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏ 
2:250மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
2:263   قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَاۤ اَذًى‌ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَلِيْمٌ‏ 
2:263கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.
3:17   اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏ 
3:17(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.

3:125   بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ‏ 
3:125ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
3:142   اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ‏ 
3:142உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?


PAGE 41
3:146மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து
விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

எதிரிகளால் பழி வாங்கப்படும்போது பிரார்த்தித்தல்
وَمَا تَـنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا‌ ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ‏ 
7:126எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)

கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டால் கோளை சமுதாயமாக இந்த சமுதாயம் மாறிவிடும் என்று அல்லாஹுவின் எச்சரிக்கை!
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏ 
8:46இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

திட நம்பிக்கையும்,பொறுமையுமுள்ள நம்பிக்கயாளர்களில் பத்து பேர் கொண்ட குழு நூறு எதிரிகளுக்கு சமம் என்று அல்லா கூறுகிறான்!
يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ‌ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ‌ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏ 
8:65நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம்
PAGE 42

பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
விசுவாசிகளில் பலவீனம் உள்ளதை கண்டறித அல்லா ஒன்றுக்கு பத்து என்ற நிலையில் இருந்து  ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் உதவுகிறான்
اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏ 
8:66நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில்பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

துன்பங்களை பொறுமையுடன் சஹித்துகொள்ளும் மக்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு
اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏ 
11:11ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
வாழ்க்கையின் எந்த நிலையிலும் பொறுமையை கை கொண்டால் வெற்றி நிச்சயம்
وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏ 
11:115(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.

அனைத்து துறை களிலும் வெற்றியயை அடைபவர்கள் யார் என்றால்? தொழுகையை நிலை நிறுத்துபவர்களும், பொறுமையை கடை பிடிப்பவர்களும், ரஹசியமாகவும்,வெளிப்படையாகவும் நல்ல மார்க்கத்தில் தங்களது பொருளாதாரத்தை சிலவிடுபவர்களும் நன்மையை கொண்டு தீமையை தடுப்பவர்களுமே!.
وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ‏ 
PAGE 43

13:22இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடிபொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

அனைவருக்கும் சலாம் அல்லாஹுவின் அமைதி நிலவ மனமுவந்து பிரார்த்தித்துத்து கொடிருப்பவர்க்களுமாவார்கள்
سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ‌ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ‏ 
13:24நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ‏ 
16:42இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.

مَا عِنْدَكُمْ يَنْفَدُ‌ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍؕ وَلَـنَجْزِيَنَّ الَّذِيْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
16:96உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

அல்லாஹுவின் பாதையில் சொந்தம் ஊர்களை விட்டு வெளியேறியவர்கள்.
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
16:110இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவிசெய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப்
PAGE 44
பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹுவின் பேருதவி இல்லாவிடில் நம்மால் பொறுமையாக இருக்க இயலாது!
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ‌ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِىْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ‏ 
16:127(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக; எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
பொறுமையாக இருப்பதற்கு மிகுந்த ஞானம் தேவை
وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا‏ 
18:68“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!
அல்லாஹுவின் நாமம் கூறியதை கேட்ட மட்டில் தங்களுடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கு கிறதோ அவர்கள்தான் உண்மையான சத்யா விசுவாசிகள்!
الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِيْنَ عَلٰى مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏ 
22:35அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.


பொறுமைக்கு இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் மிக அழகிய நற்கூலி உண்டு!
اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ‏ 
25:75பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

PAGE 45
பொறுமையை மேற்கொண்டதற்கு பலவகை நற்கூலிகள் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவினால் அள்ளி வழங்க படுகிறது!
اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏ 
28:54இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.

பொறுமையாளர்களுக்கு மட்டுமே நிலையான வெற்றி!
وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَـكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ۚ وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ‏ 
28:80கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்என்று கூறினார்கள்.

மேலும் அல்லாஹுவின்மீது நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் வாழ்ந்தவருக்கு அல்லாஹுவின் மிகுந்த வெகுமதி!
الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ‏ 
29:59(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

பொறுமையை கை கொண்ட மனிதர்களிடமிருந்தும்,சமுதாயத்திலிருந்தும் அல்லாஹு நல்லவர்களையும் இம்மாம்களையும் நல்ல சமுதாய வழிகாட்டிகளையும் பின் தலைமுறைகளாக உருவாக்க செய்வான்!
وَ جَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا‌ ؕ وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ‏ 
32:24இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.

PAGE 46

நல்லவர்களாகிய ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரும் நன்மை உண்டு! இது ஒரு வியப்பிற்கு உரிய வசனம்!!!!!
اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏ 
33:35நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
.

பொறுமையாளர்களுக்குமட்டுமே அத்தாசிகள் அளிக்கபடுகின்றன!
فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَيْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏ 
34:19ஆனால், அவர்கள் எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

பொருமயாளர்கள் அல்லாஹுவிடம் பெரிதுமாக கணக்கின்றி நன்மையை பெறுவார்கள்
قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ‌ ؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ‌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ‌ ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏ 
39:10(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி
PAGE 47

விசாலமானதுபொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.


பொறுமயாளர்கள் மட்டுமே சொர்கத்தை அடைவார்கள் பொறுமையற்றவர்கள் இம்மையிலும் மறுமையிலும் படு தோல்வி அடைபவராகவே உள்ளனர்
وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏ 
41:35பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ‏ 
42:33அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில்பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

நம்முடைய விசுவாசங்களையும் பொறுமையை யும் அல்லாஹு மிக அதிகமாக சோதிப்பான் பொறுமை இல்லாத எந்த முஜாஹிதும் அணுவளவும் வெற்றி கொள்வதில்லை
وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ‏ 
47:31அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும்பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏ 
70:5எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
وَ لِرَبِّكَ فَاصْبِرْؕ‏ 
74:7இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
பொறுமையுடன் இருந்தவர்களுக்கு நேரடி சொர்க்கம்!
وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏ 
PAGE 48
76:12மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

நம்பிக்கை கொண்டு ம் பொறுமையுடனும் இருந்தும் ஒருவருக்கு ஒருவர் நன்மையை கொண்டு கிருபயயை உபதேசித்தும் பெரும் துயரங்கள் இன்னல்கள் நிறைத்த கணவாயை கடத்தலாகும் எஹ்ற்று பொறுமைக்கு மிகுந்த அந்தஸ்தை அல்லாஹு அழைக்கின்றான்!
ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏ 
90:17பின்னர், ஈமான் கொண்டுபொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

பொறுமையற்றவர்கள் நிரந்தர நஷ்ட்ட வாளிகளே
   اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّوَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

அல்லாஹுவின் நல்ல அடியார்கள் என்றால் அவர்களிடம் இப்படியான குணம் கொண்டவர்களாவார்கள்.

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 
23:1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர்.
 الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 
23:2. அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.
 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 
23:3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.
 وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏ 
23:4. அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
PAGE 49
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏ 
23:5. அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.

அவர்களிடம் ஒப்படைக்க படும் அமாநிதங்களின்பேரில் பெரும் கவனம் கொண்டு அதை பேணிக்காப்பார்கள்!.
 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏ 
23:8. அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது எதை சுமக்க தகுதி உள்ளதோ அதை மட்டுமே அல்லாஹு சுமக்க செய்கிறான் அதிக பாரங்கள் யார்மீதும் சுமத்த படுவதில்லை!.
وَلَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ وَلَدَيْنَا كِتٰبٌ يَّـنْطِقُ بِالْحَـقِّ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ 
23:62. நாம் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் மெய்யான தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கின்றது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

அல்லாஹுவை பற்றிய உள்ளச்சதால் அவனுடய அருள் கொடைகளை நினைத்து அழுது கெஞ்சி அவனிடம் பிரார்த்தித்தால் நிச்சயம் அல்லாஹு தன அடிமைகளின் பிரார்த்தனை கலை ஏற்று கொள்கின்றான்!.
قُلْ مَا يَعْبَـؤُا بِكُمْ رَبِّىْ لَوْلَا دُعَآؤُكُمْ‌ۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا‏ 
25:77. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.
PAGE 50
மனமுவந்து கேட்கப்படும் பிரார்த்தனைகள் காரனால் அவர்கள் முன்செய்த பாவங்கள் நன்மையாக மாற்ற படுகின்றன!
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 
25:70. ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்பு கோரி) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அதனை) நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

எக்காரணத்தை கொண்டும் ஆருக்கு எதிராகவும் பொய் சாக்ஷி சொல்ல கூடாது ஏற்று அல்லு எச்சரிக்கின்றான்!
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 
25:72. அன்றி, எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்று விடுகின்றார்களோ அவர்களும்,
அல்லாஹுவின் அழகிய அடிமை களின் லக்ஷணங்கள்,அடையாளங்கள் இவைகள் தான்
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏ 
25:63. இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.
25:64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ 
25:64. அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள்.
25:65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ۖ ‏ 
25:65. தவிர, அவர்கள் "எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள்.
51
25:66 اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا‏ 
25:66. (அன்றி) "சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்திப்பார்கள்).
25:67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ 
25:67. அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.
25:68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ‏ 
25:68. தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.
மனைவி மக்களிலிருந்து எதிரிகள் உருவாகக்கூடும் என்று அல்லாஹு எச்சரிகிறான்!
‌يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
64:14. நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)




52
நாம் அளவுகடந்து விரும்பும் பொருட்களும் சந்தானங்களும் அனைத்தும் சத்ய விச்வாசிக்கு பெரும் சோதனையே அன்றி வேறில்லை!
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ‌ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏ 
64:15. உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது.

மனிதனின் அனைத்து உறுப்புகளும் அனுடைய தோலும் அவனுக்கு எதிராக சாக்ஷி கூறும் நாள் மறுமைநாள்!
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏ 
41:22. உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவை களில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.

மன ஆசைகளை அவன் தெய்வமாக்கி வணங்கி வழிப்பட்டு வாழும் மனிதர்களை பற்றி!
  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏ اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً
45:23. (நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

53
மரணம் நம்மை பிடிப்பதற்கு முன்னே நமக்கு அல்லாஹு வழங்கிய வற்றிலிருந்து தானம் செய்ய வேண்டும் மரணத்திற்கு பின் உள்ள தானம் அவரை சென்று அடைவதில்லை!
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 


63:10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான்.