Wednesday, May 18, 2022
Antisocial personality disorder "சமூகவிரோத ஆளுமைக் கோளாறு"
“Antisocial personality disorder”
சமூகவிரோத ஆளுமைக் கோளாறு இது ஒரு மனநல பிரச்னை இதற்கான அறிகுறிகள்.
சமூகவிரோத ஆளுமைக் கோளாறு (Anti social personality disorder) என்பதை சில நேரங்களில் தனி மனிதனால் ஏற்ப்படும் சமூக பிரச்னை என்றும் அழைக்கலாம்.
இது ஒரு மன நலக்கோளாறு.இதற்க்கு உற்பட்ட ஒரு நபர் தொடர்ந்து சரியாக அல்லது தவறாக கருதாமல் மற்றவர்களின் உணர்வு மற்றும் உரிமைகளைப் புறக்கணிக்கும் மனநிலை கொண்டவராக இருப்பர்.
Anti social personality disorder இருப்பவர்கள் மற்றவர்களை கடுமையாக அல்லது மிகவும் அலட்சியமாக விரோதிபோல் நடத்துவார்கள். ஆனால் தங்கள் நடத்தைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இருக்காது.
தங்களது செயல்களின் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருப்பதால் Anti social personality disorder பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் கட்டுபாடுகளை புரம்தள்ளியும் சட்டங்களை மீறி குற்றவாளிகளாக மாற துடங்கி விடுகிறார்கள் !
இவர்களுக்கு தங்களது உளவியலில் சீரமைப்பு இல்லாததன் காரணத்தினால் அவர்கள் அதிகமாக தனியாக இருப்பதை விரும்புவார்கள், தங்களை யாரும் விரும்புவதில்லை, நான் யாருக்கும் வேண்டாதவர், நான் ஏன் வாழவேண்டும், இந்த புவியில் நான் ஒரு பாழ் பொருள், என்று அவர்களது உள்மனதுக்குள் ஒருவித புலம்பல் இருந்துகொண்டே இருப்பதன் காரணத்தினால் அவர்களுக்கு பிடித்த மிக குறைவான விருப்பங்களை மட்டும் கூட்டாக வைத்துகொள்வார்கள்.
இத்தகையவர்களுக்கு அவர்களது செயல்களில் வேக குறைவு இருப்பதை காணலாம்.
அதை பற்றி யாராவது பரிந்துரைத்தால் அவர்கள் மீது பழி கோபம் என்று உருவாகிவிடுகின்றன.
இயலாமை அவர்களை பிடித்துகொண்ட படியால் எப்போதும் சோம்பலை கொண்ட நிலையிலேயே இருப்பார்கள்.
இவர்கள் பொய் சொல்லாமல் இருக்க முடியாது, குறைந்த அளவிலாவது வன்முறை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள், மற்றும் மனக்கிளர்ச்சியுடன் நடந்து கொள்வதையும் காணலாம்.
இந்த குணாதிசயங்கள் காரணமாக, இவ்வகை கோளாறு உள்ளவர்கள் பொதுவாக குடும்பம், வேலை அல்லது தங்களது துறைசார்ந்த, தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலும் இருப்பதை காணமுடிகிறது.
இதொருவகையானஉளப்பிணி என்பதால்; தங்களை சார்ந்த நிலைகளில் சரி, தவறு என்று கணிக்க முடியாத வகையிலும், தங்களை சார்ந்த மற்றவர்களை வம்பு இழுத்தல், தொடர்ந்து பொய் அல்லது வஞ்சகம் செய்தல் சாதாரணமாகவே கருதுவார்கள்..
கடுமையான, இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பிறருக்கு அவமரியாதை உண்டாக்குதல் தங்களது தனிப்பட்ட லாபத்திற்காக அல்லது தனிப்பட்ட இன்பத்திற்காக மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதுபோன்று இருப்பது, அல்லது அதை அடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவது.
இந்த பிணியின் காரணமாக இத்தகயவர்களிடம் மேலும் ஆணவம், தற்பெருமை, தாழ்வுணர்வு மற்றும் கருத்து ஆதிக்கம் செலுத்துதல், தன்னகத்தில் மறைக்கப்பட்ட குற்ற நடத்தை உட்பட சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்ளுதல் போன்றவை சாதரணாம காணுவார்கள்.
மட்டுமல்லாமல், மிரட்டல் தங்களுக்கு தோன்றும் வகையிலான நேர்மையின்மை மூலம் மற்றவர்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் சீண்டுதல் முன்கூட்டியே திட்டமிட்டு மற்றவர்களை தோற்கடித்தல், நட்போடுகூடிய உள்மரைக்கபட்டிருக்கும் விரோதம், குறிப்பிடத்தக்க எரிச்சல், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு அல்லது வன்முறை, மற்றவர்களிடம் பட்சபாதம் இல்லாதது போன்று நடந்துகொள்வது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில் வருத்தம் இல்லாதது, சுய அல்லது பிறரின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் தேவையற்ற ஆபத்து அல்லது ஆபத்தான நடத்தை, மோசமான அல்லது தவறான உறவுகள், நடத்தையின் எதிர்மறையான விளைவுகளை கருத்தில் கொள்ளாமை, தொடர்ச்சியாக பொறுப்பற்றவராக இருப்பது மற்றும் வேலை அல்லது நிதிக் கடமைகளை நிறைவேற்றத் தவறுவது...!
அதே போல் மற்றவர்கள் தங்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் இதில் அடங்கும்.
இது குணங்கள் குழந்தை பருவம் முத்தற்க்கும், பரம்பரை போக்கு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வடிவமைக்கப்படுகின்றன.
சமூக விரோத ஆளுமைக் கோளாறுக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக இன்றளவும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.
ஆனால் சமூக விரோத ஆளுமைக் கோளாறு உருவாக மரபணு மாற்றங்களும் ஒரு காரணம். மேலும் வாழ்க்கை சூழ்நிலைகள் அதன் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
மூளை வளர்ச்சியின்போது மூளை செயல்பாட்டு மாற்றங்களால்கூட இவ்வகை பாதிப்புகள் ஏற்படலாம்.
சமூக விரோத ஆளுமைக் கோளாறு பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் 15 வயதிற்கு முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும்.
இதற்க்கான அறிகுறிகள் தீவிரமாகும்போது, நடத்தை சிக்கல்கள் உருவாகும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது அதீத ஆக்கிரமிப்புகளை செலுத்துதல், சொத்துக்களை அழிவதில் சங்கடங்கள் இல்லாதிருத்தல், வஞ்சகம், திருட்டு, நடைமுறை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை வைத்து புரிந்துகொள்ள முடியும்.
இத்தகைய குணங்கள் இளம் வயதிலேயே காண படுகின்றபோது அதற்குரிய மனநல நிபுணரை அணுகுவது நல்லது.
K முஹமது பஷீர்.
9442240339
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment