Friday, April 27, 2012

மனிதன் இவ்வளவு மூடனாக இருப்பானோ..........?


மனிதன் இவ்வளவு மூடனாக இருப்பானோ..........?

இறைவனி  (அல்லாஹுவி)ன்  படைப்பில் உயர்ந்த படைப்புதான் மனிதன் மனிதனை விட மிகையான படைப்புக்கள் ஜீவராசிகளில் இல்லை என்று தான் சொல்லமுடியும்இறைவனின் படைப்பில் மனிதனை விட சிறந்த படைப்புக்கள் உண்டு என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லவே இல்லை.  இப்படிப்பட்ட உயர்ந்த படைப்பான மனிதன் தன்னை தானே எப்படி தரம் தாழ்த்தி கொள்கிறான் என்பது மிகவருத்தத்திற்கு உரிய தாகத்தான் இருக்கிறது.
அவன் தன்னுடைய மன அமைதிக்காகவும் ஆத்மீய தேவைகளை பூர்த்தி செய்யவும் பல வற்றை வணங்குகின்றான்  இதைத்தான் இன்னதைத்தான் வணங்க வேண்டுமென்று கணக்கில்லாமல் கண்டதையும் கேட்டதையும் வணங்குகின்றான்…. மனிதன் வற்றயல்லாம் வணங்குகிறான் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும்;  சூரியன் சந்திரன் நட்சத்திரம் வானம் பூமி இருட்டு வெளிச்சம் காற்று நீறு நெருப்பு பறவை பாம்பு பன்றி எலி மரம் செடி கொடி கல்லு முள்ளு புல்லு மட்டை மண்கட்டை மாடு மண்டையோடு மனித ஆவி மனித உடல் மனிதகல்லறை இப்படி அவனுடய முன்னோர் எதயல்லாம் அவனுக்கு வணங்கவும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகராக்கவும் கற்றுகொடுத்தார்களோ அவற்றை அனைத்தையும் வணங்குகின்றான் வழிபடுகின்றான்  இது மொத்த மனித நிலை. ஆனால் ஒரு முஸ்லிம் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு அல்லாஹுமட்டும் தான் தெய்வம் அவனை அன்றி மற்று தெய்வம் ஒன்றும் இல்லை என்று உறுதி  எடுத்த முஸ்லிம் இன்று கல்லறைகளின் முன்னே நின்று கையேந்தும் அவல நிலைக்கு ஆளாக்கபட்ட காட்சி அவன் நேரான பாதையிலிருந்து வழி தவறிவிட்டதை தான் காட்டு கின்றன. இப்படி வழிகெட காரணம்தான்யார்?

இஸ்லாம் எந்த மடைமைக்கு எதிராக புரட்ஷி செய்ததோ அந்த மாபெரும் தவறு (شعرك) இணை வைத்தல்  இன்று இஸ்லாமிய கலாச்சாரமாக தழைதோங்கி நிற்கிறது மட்டுமா இணை வைக்காதவன் சரியான முஸ்லிமல்ல என்றும் விளம்பரம் செய்யபடுகிறது
அல்லாஹு வைமட்டும் அழைத்து பிரார்த்திப்பது தான் இஸ்லாமிககொள்கைஅதை குர்ஆன் தெளிவாக விளக்கி கூருகிறது
لَهُ دَعْوَةُ الْحَقِّ ۖ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ ۚ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. 13:14.
وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். 16:20.
أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். 16:21.
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا
அவனையன்றி (வேறு  யாரையாவது ) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). 17:56.
أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ள17:57.


إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்4:48.
قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ
(நபியே!) நீர் கூறும்: நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் எங்கள் இடம் வந்து விடுஎன நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.இன்னும் கூறும்: நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம். 6:71.

أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاءَ ۚ إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்18:102.
قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ إِن يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا
அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்). 35:40.
  أَمِ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ شُفَعَاءَ ۚ قُلْ أَوَلَوْ كَانُوا لَا يَمْلِكُونَ شَيْئًا وَلَا يَعْقِلُونَ
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.) 39:43
39:44   قُل لِّلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا ۖ لَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
 “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்என்று (நபியே!) நீர் கூறுவீராக! 39:44.
பிரார்த்தனைதான்  ஆராதனை வணக்கம் அது அல்லாஹு வோடுமட்டும் தான் ஆகுமானதாகும் அல்லாஹு அல்லாதவர்கள் யார் ஆனாலும் சரி அவர்களிடம் பிரார்த்திப்பது மன்னிப்பில்லாத குற்றமாகும்  அது பெரும் பாவம் என்றுதான் இஸ்லாம் திட்டவட்டமாக கூறுகிறது







இந்த கொள்கயை  நிலை நாட்டுவதற்காகத்தான் இஸ்லாம் பெரும் போராட்டங்களையும் கஷ்ட்டங்களையும் பலபல நஷ்ட்டங்களையும் உயர்ந்த உயிர்த்தியாகங்களையும் சாஹித்துகொண்டன ஆனால் இற்று நம்முடைய பெரும் தளைவர்களாகிய ஆலிம்கள் என்று அழைக்ககூடியவர்கள்  அல்லாஹு அல்லாதவர்களை அழைத்து பிரார்த்திப்பது தான் உண்மையான இஸ்லாம் என்று சொல்லி  சமுதாயத்தை அந்த புறும் பாவத்தின்பால் அழைத்து செல்கின்றனர். 

அஜ்மீரில் நடக்கும் கல்லறை வழிபாடு 

கல்லறை முன்னே கையேந்தும் நபர் 

மனிதன் மட்டுமல்ல மரமும் இவர்களின் வணக்க பொருள் தான்




அதற்க்கு அவர்கள் சொல்லும் நியாயம் விசித்திரமானது; நம்மைபோன்ற சாதாரணமான மனிதர்களாகிய நாம்   பிரபஞ்சத்தின் இரட்சகனான அல்லாஹுவை அழைத்து பிரார்த்திப்பது எனபது கூடாத செயல் நம்முடைய தேவைகளை நாம் இந்த இறைநேசர்களிடம் சொன்னால் அவர்கள் அதை அல்லாஹுவிடம் சொல்லி நமக்கு அதை சாதித்து தருவார்கள்  என்று அறைகூவல் விடுத்து கொண்டும் மற்றும்  மரணித்த வர்களுடைய கல்லறைகளுக்கு சமுதாயத்தை அழைத்து சென்று அதில் சமுதாயத்தை  தழைத்திட்டார்கள்.




 அல்லாஹுவுக்கு அறியாத வற்றைய இவர்கள் அறிவிக்கிறார்கள்  ஓமகா கஷ்ட்டம்................
குர்ஆன் கூறுவதை பாருங்கள்
وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚسُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவைஎன்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்என்று கூறும். 10:18.

ஒருமுஸ்லீம்  மறித்து போன மனித கல்லறைகளுக்கு முன்னே நிற்று அந்த கல்லறையில் கிடக்கும் உயிரில்லாதவற்றிடம் தன்னை காக்கவேண்டும் தனக்கு உதவவேண்டும் தன்னுடைய இறைவனிடம் தன்னுடைய இடைத்தரகராக உதவ வேண்டும் என்றல்லாம் வேண்டி கொள்கின்றான்   அது தன்பேச்சை கேட்க்குமா கேள்க்காத என்றுகூட அறியாமல் மனிதன் இவ்வளவு மூடனாக இருப்பதற்கு காரணம் தான் என்ன?
உயிருள்ள மனிதன் உயிரற்ற பொருளிடம் உதவிதேடுவது மிருகங்கள் கூட செய்யாத செயல், உலகில் எங்கும்  எந்த ஜீவராசியும்  இப்படிப்பட்ட கல்லறை முன்னேயும் மற்றும் நிற்று பிரார்த்திப்பதை கண்ட சரித்தரம் இருக்கவே இருக்காது இப்படிப்பட்ட மனிதனை தவிர.... அது நிச்சயம்..........

அப்படிஎன்றால் மனிதன் மிருகத்தைவிட தரம் தாழ்ந்தவனா ??????????ஆம் .......மனிதன் இப்படிப்பட்ட செயல்களின்மூலம் படு மூடனாகத்தான் இருக்கின்றான்.
என்றென்றும் உயிருடன் இருக்கும் நித்யஜீவனுள்ள அல்லாஹுவை விட்டு விட்டு மரித்துப்போன மனிதகல்லறைகளில் சென்று உதவிகோருகின்றான், உலகில் உயிரற்றவைகள் உதவி செய்த சரித்தரம் உண்ட என்ன???????? இல்லையில்லை ......................நிச்சயமாகவும் இல்லை

உயிருள்ளவைகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உதவி அழிக்கும் உலகங்கங்களின் அதிபதி யான அல்லாஹுவுக்குமட்டுமே உதவி அளிக்க முடியும் அதனால் உறங்காத மறித்து போகாத எல்லாவற்றையும்  எல்லாநேரத்திலும் முற்றிலுமாக பார்த்துகொண்டிருக்கும் சர்வ அகிலங்களின் அதிபனான ஒரேஒரு அதிபனை அல்லாஹுவைமட்டும் வணங்கட்டும் அவனிடம் மட்டுமே மனிதன் உதவி தேடட்டும்
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக 2:186.
இப்படி நமக்கு மிக அருகாமையில் இருக்கும் நாம்முடைய அல்லாஹுவை மாற்றி நிறுத்தி விட்டு என்றோ மறித்து மக்கிப்போன மனித கல்லறைகளை விட்டும் நம் உடையவனான அல்லாஹுவைமட்டும் வணங்கி அவனிடம் மட்டும் பிரார்த்தனை செய்வோம் அதுதான் ஒரு உண்மையான முஹ்மினின் முஸ்லிமின் மனிதனின் லட்சியமாகும்.

K.MUHAMADBASHEER BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
http:www.//basheerdawa.blogspot.in
basheerdawa.blogspot.com
09042899396 09489969339



Monday, April 2, 2012

அழி க்கப்பட்டு வரும் பெண் சிசுக்கள்




அழி க்கப்பட்டு வரும் பெண் சிசுக்கள்
அந்தகால மனிதன் பெண்குழந்தைகளை பூமியில் பிறப்பதற்கு அனுமதி கொடுத்தான் இந்தகால நாகரிக மனிதன் விஞ்ஞஜாணத்தின் உதவியுடன் கற்பதிலே கண்டறிந்து கொன்றுவிடுகிறான்
ஏன் என்றாள்? அந்த பெண்குழந்தை பிறந்து வரதட்க்ஷனை போன்ற காரணத்துக்காக பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் ஒருசுமையாக மாறிவிடுமோ என்ற தொலை நோக்கு பார்வயின் காரணமாகதான் தான்! பிரக்கும்முன்னே கொன்றுவிட்டால், பெண்குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டபெடவேண்டாமே............
திருமண சந்தையில் ஆணுக்கு கிடைக்கும் நல்லவிலை  பெண்ணுக்கு கிடைபதில்லை என்பதுதான் பெற்றோர்களை இப்படி சிந்திக்கவைத்த முக்கியகாரணம்.
ஆம்........................  பெண்ணை வளர்த்தி அவளுக்கு காதுகுத்து,  பூ பூ நன்னீராட்டு,  வரதட்க்ஷனை, திருமணம், திருமணதிற்குபிறகுவரும் மகபேருசிலவு, இப்படிபோகிறது சமூகத்தில் பெண் குழந்தையை பெற்றவரின் நிலைமை.
அதுமட்டுமா பெண்ணை கட்டிகொடுத்தால் அவனுக்கும் அந்த ஆண் வீட்டாருக்கும் வாழ்நால் முழுதும் அடிமைகளாக இருக்கவும் வேண்டும்.
அதே  ஒருஆன் குழந்தையாக இருந்தால் பிற பிற்க்குசிலவாகும்  சிலவுமட்டும்தான்...... அதாவது ஒரேஒருமுறை முதலீடுதான்
அவன் வளர்ந்து   சொந்தமாக சம்பாதித்துதருவான் பிறகு அவனை திருமண சந்தையில் நல்ல லாபத்துக்கு பெண்விட்டாருக்கு விற்கவும் முடியும்  மட்டுமல்ல அந்த பெண்ணையும் பெண் வீட்டாரையும் அடிமைகளாக வைக்க கவும்   முடியும் அவர்கள் சம்பாதித்த எல்லா சொத்துக்களையும் அநியாயமாக அடித்து  தொல்லை செய்து  துன்புறுத்திஅந்த பெண்வீட்டாரிடமிருந்து வாங்கிகொள்ளவும் முடியும், இனி சிந்தித்து பாருங்கள் இந்த நாகரிக மனிதனின் பெண்குழந்தை பிறப்பு வளர்ப்பு பற்றிய அவனுடைய முடிவு ஆஆஆம்..........................அவனுடய பெண் சிசுக்கருஅழிப்பு முடிவு சரிதானே!!!!!!!! இந்தகாலத்தில் யாரும் நஷ்ட வியாபாரம் செய்ய விரும்புவார்களா???இல்லையில்லை………………………..
மனிதன் தன் வாழ்கையின்  எல்லாவற்றிலிருந்தும், குடும்பம்,மனைவி, மக்கள், நண்பன், மதம்,என்று எல்லாதுறைகளிலும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
அப்படி இருக்கும் நிலையில் மேட்கூரியதுபோல எந்தலாபவும் இல்லாத பாவம் பெண் குழந்தைகளை எதற்கு கஷ்டப்பட்டு பெற்றுஎடுக்கவேண்டும்................இப்படி நாகரிகமாக வளர்ந்த பின்புமா மனிதன் புத்தியை கடம் கொடுப்பானா  இல்லையில்லை  ரூபாய் 500 ஐசிலவு செய்து பலலக்ஷங்களைகாப்பதற்கு   தன் மனைவிக்கு கருவுற்றது
பெண்சிசு க்கருவாக இருந்தால் அதை கருவிலேயே கருவருத்துவிடுகிறான்.
அது மனிதன் தன் சமூகத்திலிருந்து கற்றுகொண்டபாடம்
பாவம் பெண்குழந்தைகள் பெண் இனத்தை இந்த பேரழிவிலிருந்து காபோர்...................... யாருமில்லையா? ?............................

வரதட்ஷனை அது ஒரு மகாபாவம் அது ஒருமஹாகொடுமை அதைவான்குபவன் ஒருகட்டுமிரண்டி , அயோக்கியன், முட்டாள், கொடும் பாவி ,தன்மானமற்றவன் ,பெண்ணுக்கு விலைபோனவன், பெண்வதைக்குகாரணமானவன் இப்படிப்பட்ட வரதத்ஷனையை கொண்டு உணவுஉன்பவன் பாவம் பென்சிஷுவின்(பிணத்தின் ) மாமிசத்தையே உண்கிறான்…………… தன்மானமுள்ள ஆண்களே ...................வரதஷனை என்னும் கொடும்பாவத்தை நீங்களும் செய்து  கொடும் பாவிகளாகிவிடாதிர்கள்................................

K. MUHAMAD BASHEER     BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
Islamic information blogger
09042899396 09489969339

அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறும் போதுதான் மனம் அமைதி அடையும்………….



அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறும் போதுதான் மனம் அமைதி அடையும்………….

உலகத்தில் மனிதன் பலவற்றை ஆராதிகின்றான் அவற்றில் கல்லு கரடு முள்ளு முரடு பாம்பு பறவை மற்றும் மிருகங்கள் மனிதர்கள் என்று உயிர் உள்ளவைகளும் உயிர் அற்றவைகளும் உள்ளன.
ஆனாலும் மனிதன் எல்லாவற்றிலும் சரணம்(பாதுகாவல்  சாந்தி ) தேடுகிறான்.
மனிதனே   ஒன்றை படைத்தது  தான் படைத்தவை தன்னை எல்லா பேராபத்துகளிலிருந்தும் தங்களை காப்பாற்றும் என்றும் நினைத்தும் கொண்டிருக்கின்றான்.

இவர்களுக்கு துன்பம்  நேரிடும்போது  இவர்களே படைத்த அவைகளை அழைத்தால் எல்லாவற்றிலிருந்தும் தங்களுக்கு பாதுகாவல் மற்றும் மோக்ஷம் சாந்தி (மனஅமைதி ) தரும் என்றும் உண்மையாக நம்பிக்கொண்டும் இருக்கி ன்றான்.
இப்படிஇவர்கள் நம்புவதற்கு  இவர்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் கூட .......... அதில் திட நம்பிக்கை கொண்டுள்ளான்.

மனிதர்கள் நாகரிகத்தில்எவ்வளவுதான் முன்னேறி  இருந்தாலும் இவ்விஷயத்தில் படு மூடனாகவே  இருக்கின்றான்.

பாவம் மனிதன்  தன்னுடைய  உண்மையான  படைப்பாளனாகிய அல்லாஹுவை அறியாமல் கண்ணில் காணும் எவற்றையல்லாமோ கண்டு  இவைகள் தான் நம்மை படைத்தது என்று நினைத்து  அவற்றையல்லாம் வணங்கி  வாழ்க்கையின்  லட்சியத்தை அறியாதவனாக அலை பாய்ந்து கொண்டிருக்கின்றான். ஹோ மஹா கஷ்ட்டம்.?

தெய்வம் என்றால் நாம் படைத்த பொருளாக இருக்ககூடாது
நம்மை படைததாக இருக்கவேண்டும்.
படைத்தவன் பற்றி குர் ஆன்  கூறுகிறது  இப்படி
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே(அல்லாஹுவையே ) வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.                              குர் ஆன் 2:21.
பாருங்கள் நம்மையும் நம்முடைய முன்னோர் களையும் படைத்தது யார் என்று.   மட்டுமல்ல அவன் எத்தகயவன் என்றால்.
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
(அல்லாஹுவே ) வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் 2:22.
மட்டுமல்ல அல்லாஹ்  நமக்கு வேண்டிஉலகத்திலுள்ள அனைத்தையும்
படைத்தான்.
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே
உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். 2:29.

யாராலும் படைக்கப்படாத உலகத்தில் எல்லாவற்றையும் படைத்த ஷ்ர்வேஸ்வரனான  ஜெகாதிபதியான  பரம்பொருளான  பரபிரம்மனான ஜெகநியந்தாவான யார் கண்களுக்கும் தெரியாதவனான
எல்லாகண்களையும் பார்துகொண்டிருப்பவனான உலக ரக்ஷகனான 
அல்லாஹு வை மட்டும் அழைக்கும் போதுதான்  மனம் அமைதி அடையும் வாழ்கை மோக்ஷம் அடையும்
ஏன் என்றால்  உலகத்தில் மற்ற எல்லா  கடவுள் களைப்போல மனிதனால் உருவாக்க பட்ட கடவுள் அல்ல அல்லாஹ்........... உலகத்தையே உருவாகிய உண்மையான ரக்ஷகன் படைப்பாளன் அல்லாஹ் ஆக்குபவன் அல்லாஹ் அழிப்பவன் அல்லாஹ் காக்குபவன் அல்லாஹ்  பரிபலகன்  அல்லாஹ் ஜகதீஸ்வரன் அல்லாஹ்...........ஆம் ................ அல்லாஹ் அவனைதவிர  ஒரு தெய்வமும்இல்லை ............
நம் அனைவருடைய தெய்வமும்ஒரே ஒருதெய்வம் மட்டும்தான்
அது அல்லாஹு மட்டும்தான்
وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்;(அல்லாஹ்) அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 2:163.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
அல்லாஹ் அவன் ஒருவனே.112:1
اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.112:2.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.112:3.
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.112:4.
இன்னும் நம்முடைய தெய்வமாகிய அல்லாஹ் அவன் எப்படிபட்டவன் என்றால்
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்;  அவனைத் தவிர வேறு நாயன் இல்லை;  மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.59:22.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். 59:23.
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி
உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:24.
இப்படி பட்டஅல்லாஹுவை தவிர உலகில் மற்ற கடவுள்கள் இருக்கின்றன என்பதற்கு  யாரிடமும் எந்தவித  ஆதாரமும் இல்லவே  இல்லை  யாரிடமும் இல்லைஇருந்தால் யாராவதும் அதை கொண்டு வரட்டும்  இல்லை இல்லை மனிதர்களே  இல்லை………………………  அதனால்  அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறி மன அமைதி பெற்றிடுங்கள்
அல்லா அவனை தவிர மற்றில்லைதெய்வம் ஓன்றும்.......................

K. MUHAMAD BASHEER     BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
Islamic information blogger
09042899396 09489969339