அல்லாஹுவின் நாமத்தில்
Are you sure you want to know every Muslim and non Muslim article
இந்த கட்டுரையை
ஒவ்வொரு முஸ்லிமும் முஸ்லிம் அல்லாதவர்களும் நிச்சயம் படித்திருக்க வேண்டும்.
மற்று மதத்தவரின்
கொள்கை கோட்பாடு மற்றும் வழிபாட்டு
தளங்கள் தகர்க்க படவேண்டும?
இஸ்லாம் என்ன சொல்கிறது…………….
அமைதிக்காக யுத்தம் செய்யுங்கள் அந்தயுத்தம், ஜிஹாது, போராட்டம்,
தென்றலின் தன்மை கொண்டதும் முல்லைபூவின் மென்மையை கொண்டதாகவும் இருக்கட்டும்...........................
கீழே குறிப்பிட
படும் இந்த குர் ஆன் வசனத்துக்கு ஒரு முஸ்லிம் முற்றிலும் கட்டுபடுபவனாக இருந்தால் ஒரு முஸ்லிமினால் அவனுடைய செயல்களின் மூலமாக எந்த ஒரு கோவில்களோ மற்றுமதத்தவருடைய வணக்க வழிபாட்டு தளங்களோ அழிக்கப்பட ஒரு உண்மையான முஸ்லிம் காரண மாக இருக்க முயாது. அதை அல்லாஹு தன்னுடைய திரு மறையின் மூல மாக தெளிவுபடவிளக்குவதை பாருங்கள்
الَّذِينَ
أُخْرِجُوا مِن دِيَارِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ
ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ
وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا ۗ
وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.22:40.
மற்ற மத
தேவாலயங்களை அவமதிக்க கூடாது என்று உணர்த்துகின்றான் அல்லாஹு,
மனிதர்களில் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்யும் சிலரை மற்று சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் சந்நியாசி ஆசிரமங்களும்,
கிறிஸ்தவக் கோயில்களும்,
யூதர்களின் ஆலயங்களும்,
அல்லாஹ்வின் திரு நாமம்நினைவு கூறப்படும் மற்றும் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; இப்படி ஒருவர் மற்ற மதத்தவருடைய ஆராதனை மற்றும் வழிபாட்டு தளங்களை இடிக்காவோ அதனை அவமதிக்கவோ அதற்க்கு எதிராக நாச விலையில் ஈ டுபடவோ கூடாது என்று திட்ட வட்டமாக அறிவிக்கின்றான். இன்று மற்ற மதத்தவர்கள் நம்முடைய மஸ்ஜிதுகளை இடி கின்றார்கள் அதற்க்கு எதிராக சூழ்ச்சியில் ஈடு படுகின்றார்கள் சமீபத்தில் இலங்கையில் கூட ஒரு மஸ்ஜிதை பள்ளியை இடித்தார்கள் அதற்க்கு முன்னே நம் நாட்டில் பாபரி,
விஷமிகள் தகர்த பாபரிமஸ்ஜித்
இப்படி பல இஸ்லாமிய ஆராதனை கூடங்கள் தகர்த்தெறிய பட்டது இதற்க்கு பதிலாக முஸ்லிமாகிய நமக்கு மற்ற மத வழிபாட்டு தளங்கள் அழிப்பதற்க்கோ தகர்ப்பதற்க்கோ நம்முடைய மார்க்கம் இஸ்லாம் அனுமதிப்பதில்லை ஏன் என்றால் இஸ்லாம் அல்லாஹுவின் மார்க்கம் முஸ்லிம்கள் அல்லாஹுவின் அடிமைகள் அல்லாஹுவோ உலகங்களை ஆளும் ஒரேஒரு சத்திய தெய்வம் அந்த அல்லாஹுவை தெய்வமாக ஏற்று கட்டு படும் ஒரு முஸ்லிம் அவனுடைய கட்டளையை ஏற்றேஆகவேண்டும்; மற்றவர்களை பொறுத்த வரை அவ்வாறல்ல அவர்கள் வணங்கும் கடவுள் அவர்களே உருவாக்கின கடவுள், அவர்களுடைய மதம் எனபது அவர்களே உருவாக்கிய மதம், இப்படி எந்த ஒரு அடிப்படை அறிவும் ஆதாரமும் உண்மையான வழிகாட்டலும் தலைமையும் தத்துவங்களும் என்று ஒன்றுமே இல்லாமல் வெறும் மனோஇச்சையை மட்டும் பின்பற்றி வாழும்மற்ற
மதத்தவர்கள் செய்வதை போல செயல்பட ஒரு சத்திய வாதியான முஸ்லிமுக்கு மேற்கூறப்பட்ட து போன்ற இழி செயல்களில் ஈடுபட எப்படி இயலும்.
ஒரு முஸிலிமால் எந்த ஒரு கோவில்களையோ
மற்ற ஆராதனை ஆலயங்களையோ
தகர்க்க முடியாது;
ஆம்........ ஒரு முஸ்லிம் அனைத்தையும் காப்பவனே ஒன்றைக்கூட அழிப்பவன் அல்ல ஓவொரு முஸ்லிமும் உலகத்தின் வழிகாட்டியே இஸ்லாமிய கலாச்சாரமும் உண்மையான முஸ்லிமும் இந்த உலகில் இல்லாமல் போயிருந்தால் உலக மக்கள் நேர்மார்க்கம் கண்டறிந்திருக்கவே முடிந்திருக்காது நிச்சயம்;
அப்படிப்பட்ட மாபெரும் மனிதாபிமானமும் பெரும்தன்மையும் கொண்ட நாம் மற்றமதங்களையும் அவருடைய வணக்க வழிபாட்டு கோட்பாடுகளையும் வழிபாட்டு தளங்களையும் அழிக்கவோ அவமதிக்கவோ மற்றும் அதற்க்கு எதிரான நாச வேலையில் ஈடுபடவோ கூடாது அந்தமதங்களும் கொள்கைகளும் எல்லாம் உண்மையல்ல என்பது சரிதான் அதை கொள்கை ரீதியாக வாயிலாக எடுத்து கூற மட்டும் தான் நமக்கு அல்லாஹு அனுமதி அழித்திருக்கின்றான்.
கோயம்பத்தூரில்
ஒரு கதியாணிகள் என்று அழைக்கபடும் அஹ்மதிய கொள்கையை தங்களுடைய வழி முறையாக கொண்ட
அமைப்பின் கீழில் செயல் படும் ஒரு ஆராதனை
ஆலயத்துக்கு எதிராக கோவை முஸ்லிம் கூட்டமைப்புகள் ஓன்று திரண்டிருப்பது எதற்காக?
அந்த அமைப்பின் குறைபாடுகளை
மக்களுக்கு எடுத்து சொல்லி முஸ்லிம்களை தெளிவு
படுத்துவதற்குக்காக மட்டுமாக அப்படியாக இருந்தால் அது வர வேற்க்க தக்கது அது கொள்கையை
கொள்கையை கொண்டு எதிர்ப்பது மட்டும் தான், அன்றி மற்ற ஒன்றுக்குமாக இருக்க கூடாது
அவர்கள் இஸ்லாமிய பெயரை வைத்துகொண்டு இவர்கள் மக்களை முஸ்லிம்களை
ஏமாற்றுகிறார்கள் என்ற காரணத்துக்காக என்றாலும் அது சரிதான்.
அப்படியானால் நாம் முஸ்லிம்கள் முதலில் எதிர்க்க வேண்டியது அவர்களை அல்ல
அல்லாஹுவுக்கு இணை வைத்து அவ்லியாக்களையும் அவர்களின் கல்லறைகளையும் மற்றும் கல்லையும் மண்ணையும் மரத்தையும் ஆவியையும் பாவியையும் கண்ணில் காணும் அனைத்தையும் வழிபடும்
கல்லறை பூஜகரையே! இவர்கள் இஸ்லாமின் ஏக துவ கொள்கையான அடிப்படை கொள்கையிலிருந்த
மக்களை வலி கெடுக்க செய்கின்றனர் அந்த
பெரும் பாவத்தை செய்ய அவர்களுடைய நியாயத்தை பாருங்கள் நங்கள் பிரார்த்திக்கும்
இவர்கள் இவர்களும் இவைகளும் எங்களை அலாஹுவிடம் எங்களுடைய உதவியாளர்கள் என்ற அன்றைய மக்கத்து
( مشرق) இணை வைப்பாளர்களை போல வழிபட்டுகொண்டிருக்கும் நங்கள்
பிரார்த்திக்கும் இவர்கள் ஏர்வாடி,முத்துபேட்டை, நாகூர் ,அஜ்மீர் , என்று பூமியில் உள்ள அனைத்து மனித
கல்லறையின் முன்னே முஸ்லிம்களை சமுதாயத்தை கெட்டியிட்டு மனிதனை மனிதன் வழிபடும் நிலைக்கு கொண்டு சென்ற ஏமாற்று கேந்திரங்களை முதலில்
ஒழிக்கவேண்டும் பிறகுதான் மற்றவைகள்
; ஏன் என்றால் அல்லாஹு மன்னிக்காத குற்றம் இணைவைத்தல் شعرك ஓன்று தான்;
மற்றவைகளை அல்லாஹு தான் நாடியவர்களுக்கு மன்னித்து கொடுப்பான் இன்று இஸ்லாமியர்கள் என்ற பெயரில் பெயர்தாங்கிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை உலமாக்கள் அல்லாஹு வுடைய பள்ளிகளில் மஸ்ஜிதுகளில் அமர்ந்து கொண்டு அல்லாஹுவை வாங்கவேண்டிய நேரத்தில்அல்லாஹு அல்லாதவர்களை அழைத்து பிராத்திக்கும் அவல நிலை மட்டுமா,
இவர்கள் அல்லாஹுவின் பள்ளியில்அமர்ந்து கொண்டு என்றோ எப்பொழுதோ
இறந்து போன மனிதனின் மஹாத்மாக்களின்
ஆவிகளையும் ஆத்மாக்களையும் அல்லாஹுவுக்கு இணையாக அழைத்து அல்லாஹுவின் இல்லத்தை அசுத்தம் செய்கிறார்கள் மக்களை அல்லாஹுவின் பாதையில் இருந்தும் வழிகெடுக்கிறார்கள் இப்படி அல்லாஹுவின் மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு அல்லாஹு அல்லாதவர்களை அழைத்து பிரார்த்தனை செய்யகூடாது என்று குர் ஆன் திட்டவட்டமாக கூறியதை அலட்ஷியபடுகிரார்கள்
وَأَنَّ
الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் அழைத்து நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். 72:18
இங்கு எவ்வளவு தெளிவாக அல்லாஹுவின் கட்டளை நிராகரிக்க படுகிறது என்று கவனத்தில் கொண்டீர்களா இப்படி பெரும் தவறு செய்கிறவர்களை கண்டும் காணாதும் விட்டு விட்டு சிறிய தவறு செய் கிறவர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் தூக்கபடவேண்டியதும் திருத்த படவேண்டியதும் எது? சிந்தித்து செயல் படவேண்டும்
இதற்கெல்லாம் அப்பால் இன்று நாம் வாழும் இந்திய திருநாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த அடிப்படையில் வேண்டுமானாலும் வாழ அனுமதி உண்டு எந்த விஷயத்தையும் கொள்கையும் யார்வேண்டுமானாலும் பரப்பலாம் வளர்த்தலாம் அதை நமக்கு தடுக்க உரிமை உண்டாஎன்ன?
குர் ஆணும் அதைத்தானே நமக்கு கற்று தந்துள்ளது அதனுடைய இரண்டாம் அத்தியாயத்தில் இதோ குர் ஆண் கூறு வதை பாருங்கள்.
لَا
إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن
يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ
الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.2:256.
மிக தெளிவாக அல்லாஹு கூறி விட்டான் பார்க்கவில்லைய; நேர்வழி எது வழிகேடு எது என்று.
யார் எப்படி வாழ்ந்தாலும் யார் எதை வணங்கி வழிபட்டாலும் எவற்றை பின்பற்றினாலும் அவரவர் செய்ததற்கான கூலி அவரவருக்கு மட்டும் தான் கிடைக்கும்,
இதில் நமக்கு ஏன் இந்த பயம்,
நாம் ஏன் மன அமைதி இன்றி செயல் படவேண்டும் எதையும் சொல்வதர்க்குமட்டும் தான் இஸ்லாமிய மார்கத்தில் அனுமதி மதத்தின் பேரில் அடிப்பதற்க்கோ இடிப்பதற்க்கோ பிடித்துவைப்பதர்க்கோ நிர்பந்திபதற்க்கோ இஸ்லாமிய மார்கத்தில் அனுமதி இல்லை அப்படி செய்பவர்கள் ஷைத்தானி (பிசாசின்)தோழர்களே அவர்கள் நேர்மார்கிகள் அல்ல.
;ஒரு கொள்கை அது நமக்கு பிடிக்க வில்லை என்றால் அது பூமியிலே இருக்க கூடாது என்று சிந்திப்பது நல்ல பண்புள்ள ஒரு முஸ்லிமுக்குஉகந்தது அல்ல; மேலே குறிப்பிட்டது போலே முஸ்லிம் உலகின் அவனுடைய நாட்டின் முன்மாதிரியாக மட்டும் தான் இருக்க வேண்டும்,அவன்தான் முஸ்லிம் அல்லாமல் நாட்டில் குழப்பம் கொடுமை அக்கிரமம் அநீதி என்று ஷைத்தானின் செயல்களில் ஈடு பட்டுக்கொண்டு தனக்கு மனதில் தோன்றியது தான் நற்செயல் என்று செயல் பட்டு கொண்டு திரிபவநல்ல முஸ்லிம். ;ஒரு ஊரில் ஒரு முஸ்லிம் வாழுகிறான் என்றால் அந்த ஊரில் உள்ள எல்லாவர்க்கும் அவனுடைய வாழ்நாளின் வாழ்க்கையின்
நன்மை உபயோகம் கிடைத்திருக்க
வேண்டும் நுகர்ந்திருக்க வேண்டும் தனக்காக மட்டும் வாழுபவன் அல்ல முஸ்லிம் மற்றவரின் ஆனந்தத்துக்காக வும் அமைதிக்காகவும் நலனுக்காகவும்வளர்ச்சிக்காகவும் வாழுபவனே
முஸ்லிம் இப்படி முஸ்லிமின் வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு மாபெரும் உபகாரமாக மட்டும் தான் இருக்க வேண்டும் ஆம்…… நாம் மட்டும் தான் உலகத்தின் உத்தம சமுதாயம் மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்
சிறந்த சமுதாயமாக உன்னதமான சமுதாயம் சத்திய சமுதாயம் அகில உலக ரக்ஷகனான அல்லாஹுவால் தேர்ந்து எடுக்க பட்ட சமுதாயம்
كُنتُمْ
خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ
عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ
لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110.
நம்முடைய ஒவ்வொரு செயலும் அந்த உத்தம செய்தியைத்தான் உலகுக்கு காட்ட வேண்டும் அப்படிப்பட்ட நற்செயல்களில் மட்டும்தான் நாம் ஈடுபட வேண்டும்
இனி நாம் உறுதி எடுப்போம் நன்மையை மட்டும் ஏவுவோம் அணைத்து தீமைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் இன்ஷா அல்லா.........................
சஹோதரர்களே அமைதிக்காக யுத்தம் செய்யுங்கள் அந்த யுத்தம், ஜிஹாது, போராட்டம், தென்றலின் தன்மை கொண்டதும் முல்லைபூவின் மென்மையை
கொண்டதாகவும் இருக்கட்டும்.
ஆம் ...................சஹோதரர்களே............மக்காவை
இஸ்லாம் வெற்றிகொண்ட பொழுது ஒரு எதிரியின் மூக்கு கூட வியர்க்க வில்லை எந்த கண்ணும்
பயத்தால் அஞ்சவில்லை எல்லாவர்க்கும் பாதுகாப்பு அரவணைப்பு மனமுவந்த தழுவல் இப்படி
பெரும் கொடுமைசெய்த மிகப்பெரும் கொடுமை செய்த முஸ்லிம்களை மிககொடுமையாக கொன்று குவித்த உரிமைகளையும் உடமைகளையும் உயிரைக்கூட பறித்து எடுத்து சொந்த தாயகமான மக்காவைவிட்டும் துரத்தியடித்தும் வாழ்வதற்கு வேண்டி மதீனாவுக்கு சென்ற இடத்தில் அங்கும் வந்து யுத்தம் செய்த வாழவிடாமல் தடுத்து கொண்டிருந்த பெரும் கொடுங்கோலர்கலான மக்கத்து முஸ்ரிக்குகள்க்கும் முனாபிக்குகள்க்கும் எதிரிகளுக்கும் நன்மை செய்த உலகிலேயே அன்றும் இன்றும் என்றும் எடுத்து காட்டான ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் ஒன்றே ஓன்று மட்டும் தான்
ஏன் என்றால் இஸ்லாம் என்றால் அமைதி என்று தான் பொருள்
இஸ்லாம் முழுமையாக உள்ள உலகில் உள்ளத்தில் மனிதனில் அமைதி மட்டும் தான் அமைதி கிடைக்கும் ஆம்...........ஷாந்தி...........
ஷாந்தி........... ஷாந்தி.............இஸ்லாம்
அது மனிதனுக்கு அளிப்பது ஷாந்தி மட்டும்தான்.
அகில
உலகிலும் இஸ்லாம் பரவட்டும்
அகில
உலகிலும் அமைதி நிலவட்டும்
அகில
உள்ளங்களும் அமைதியால்ஆனந்தம் அடையட்டும்
K.MUHAMADBASHEER BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
http://basheerdawa.blogspot.in/2012/03/blog-post.html
basheerdhawa@hotmail.com
http:www.//basheerdawa.blogspot.in
09042899396 09489969339


No comments:
Post a Comment